| ஒண்ணுதல் திலகமும் அழிந்தது; கண்ணும் மைந்நிறம் ஒழிந்து செந்நிறம் எய்தி | 5. | உள்நிறை கொடுமை உரைப்ப போன்றன; சேதகம் பரந்தது செவ்வாய்; மேதகு குழைகெழு திருமுகம் வியர்ப்புள் ளுறுத்தி இழைகெழு கொங்கையும் இன்சாந் தழீஇக் கலையுந் துகிலும் நிலையிற் கலங்கி | 10. | என்னிது விளைந்த வாறென மற்றி(து) அன்னது அறிகிலம் யாமே; செறிபொழில் அருகுடை ஆரூர் அமர்ந்துறை அமுதன் முருகுவிரி தெரியல் முக்கண் மூர்த்தி மராமரச் சோலைச் சிராமலைச் சாரல் | 15. | சுரும்பிவர் நறும்போது கொய்யப் பெருஞ்செறு வனத்தில்யான் பிரிந்ததிப் பொழுதே. | | 10 |
நறுமணத்தோடு மலர்கின்ற மாலையை அணிந்த வனும், மூன்று கண்களையுடையவனும் ஆகிய இறைவனது மராமீச் சோலையையுடைய திருச்சிராமலைச் சாரலில், வண்டுகள் வீழும் நறிய போது சிலவற்றைக் கொய்து வருதற் பொருட்டு, அடர்த்தியான காட்டில் இவளை யான் இப்பொழுதுதான் பிரிந்து போய்வந்தேன். (நெடும்பொழுது தாழ்த்திலேன்; வந்து பார்க்கும் பொழுது) இவளுடைய இருள் போன்ற கூந்தல் எழுச்சியுடைய அழகு சிதைந்து குலைந்துள்ளது; வியப்பைத் தரும், வண்டுகள் ஒலிக்கும் மாலை அலங்கோலமாகக் கசங்கியுள்ளது, ஒளிபொருந்திய நெற்றியில் இட்டதிலகம் அழிந்துவிட்டது. கண்களில் தீட்டிய மை களைய, கண்கள் சிவந்து, எவையோ சில கொடுமையைக் கூறுவனபோல்வன போன்றன; சிவந்த வாய் அந்நிலை குலைந்தது; காதில் குழையணிந்தமையால் அழகிதாய்த் தோன்றும் முகம் வெயர்ப்புடையதாக, அணிகலம் பொருந்திய தனங்களில் பூசப்பட்ட சந்தனம் அழிந்து, மேகலையும், உடையும் நெகிழ்ந்தமையால் ‘இவ்வாறான இந்நிலை எத்தன்மையின் விளைவு’ என அறியயாம் இயலேம். குறிப்பு: இது, தலைவி தலைவனது களவொழுக்கத்துட் பட்டமையைத் தலைவியது தோற்றம் பற்றித் தோழி குறிப்பால் உணர்ந்தது, திணை குறிஞ்சி. “செறி பொழில்” என்பது முதலாகத் தொடங்கியுரைக்க.
|