அகவற்பா 281. | புனமயிற் சாயற் பூங்குழல் மடந்தை மனைமலி செல்வம் மகிழா ளாகி ஏதிலன் ஒருவன் காதலன் ஆக விடுசுடர் நடுவண்நின்(று) அடுதலின் நிழலும் | 5 | அடியகத் தொளிக்கும் ஆரழற் கானத்து வெவ்வினை வேடர் துடிக்குரல் வெரீஇ மெய்விதிர் எறியுஞ் செவ்விய ளாகி முள்ளிலை யீந்தும் முளிதாள் இலவமும் வெள்ளிலும் பரந்த வெள்ளிடை மருங்கில் | 10 | கடுங்குரற் கதநாய் நெடுந்தொடர் பிணித்துப் பாசந் தின்ற தேய்கால் உம்பர் மரையதள் வேய்ந்து மயிர்ப்புன் குரம்பை விரிநரைக் கூந்தல் வெள்வாய் மறத்தியர் விருந்தா யினள்கொல் தானே! திருந்தாக் | 15 | கூற்றெனப் பெயரிய கொடுந்தொழில் ஒருவன் ஆற்றல் செற்ற அண்ணல் ஆரூர்ச் செய்வளர் கமலச் சீறடிக் கொவ்வைச் செவ்வாய்க் குயில்மொழிக் கொடியே. 13 |
281. பொழிப்புரை: முறைமை யறியாத, ‘யமன்’ என்னும் பெயரையும், கொடிய தொழிலையும் உடைய ஒருவனது வலிமையை அழித்த பெருமான் எழுந்தருளியுள்ள திருவாரூர் வயல்களில் பூத்துள்ள தாமரை மலர் போலும் சிறிய பாதங் களையும் கொவ்வைக் கனிபோன்ற சிவந்த வாயையும், குயிலின் குரலைப் போன்ற குரலையும், அழகிய மயில்போன்ற சாயலையும், பூவையணிந்த கூந்தலையும் உடையவள் ஆகிய, பூங்கொடி போல்பவளாகிய என் மகள், இந்த இல்லத்தில் நிறைந்த செல்வத்தில் திளைத்தலை விரும்பாதவளாய், அயலான் ஒருவனைத் தன் காதலனாகக் கொண்டு, (அவன்பின்னே போய்) ஒளியை வீசுகின்ற செங்கதிர் வானத்தின் உச்சியில் நின்று காய்தலால் நிலத்தில் உள்ளோரது நிழல் களும் அவர் அவர் அடிக்கீழ் வந்து ஒடுங்குகின்ற (எனவே, எந்த நிழலும் இல்லாத) பொறுத்தற்கரிய வெப்பத்தையுடைய சுரத்தின்கண் கொடுந்தொழிலை உடைய மறவர்கள் முழக்குகின்ற பறைகளின் ஓசையைக் கேட்டு உடம்பு நடுங்கும் நிலையை
|