வெண்பா 282. | கொடியேர் நுடங்கிடையாள் கொய்தாரான் பின்னே அடியால் நடந்தடைந்தா ள்ஆவாக - பொடியாக நண்ணார்ஊர் மூன்றெரித்த நாகஞ்சேர் திண்சிலையான் தண்ணாரூர் சூழ்ந்த தடம். | | 14 |
கட்டளைக் கலித்துறை 283. | தடப்பாற் புனற்சடைச் சங்கரன் தண்மதி போல்முகத்து மடப்பால் மடந்தை மலரணைச் சேக்கையிற் பாசம்பிரீஇ |
உடையவளாய் முள்போன்ற இலையை யுடைய ஈச்ச மரமும், அடிமரமும் உலர்ந்துபோன இலவ மரமும், (இலையுதிர்ந்த) விளா மரமும் ஆங்காங்கு உள்ள, மறைவு யாதும் இன்றி வெட்ட வெளியாகிய இடத்தில், கடுமையான குரலையுடைய, சினம் பொருந்திய நாய்களை நீண்ட சங்கிலி யாற் கட்டிவைத் திருத்தலால் அந்தச் சங்கிலியால் தேய்ந்து போன கால்களின் மேல் மான்தோலை வேய்ந்து, அதனால் அதன் மயிர்கள் தோன்றும் கூரையை யுடைய சிறிய குடில்களில் வாழும், பரட்டையாய் நரைத்துப்போன தலை மயிரையும், பாசடை இன்மையின் வெளுத்த வாயினையும் உடைய மறத்தியர்களுக்கு விருந்தாய்ப்போய்த் தங்கினாளோ! குறிப்புரை: ‘ஒன்றும் தெரியவில்லை’ என்பது குறிப்பெச்சம் இது தலைவி தலைவனோடு உடன்போயினமை யறிந்து செவிலி பின் தேடிச் சென்றது. 282. பொழிப்புரை: பகைவரது முப்புரத்தைச் சாம்பல் ஆகும்படி எரித்த. பாம்பே நாணாகச் சேர்ந்த வலிய வில்லை உடைய பெருமானது குளிர்ந்த திருவாரூர்க்கு அயலாக உள்ள கொடிய வழியிலே கொடிபோலத் துவளுகின்ற இடையினை யுடைய என் மகள் கத்தரியால் மட்டம் செய்யப்பட்ட மாலையை அணிந்த ஓர் அயலான்பின்னே காலால் நடந்தே சென்றாள்; இஃது இரங்கத் தக்கது. குறிப்புரை: ‘அடைந்தாளாக’ என்பது பாடமன்று. “கொய்தார்” என்பதனைச் சினைவினை முதல்மேல் ஏற்றப்பட்ட தாகக் கொண்டு, ‘கொய்யப்பட்ட மலரால் ஆகிய மாலை’ என்றலும் ஆம். இதுவும் முன்னைப் பாட்டின் துறையே. “திண்சிலை” என்றது, ‘மலையாகிய வில்’ என்பதனைக் குறிப்பால் உணர்த்தியது. 283. பொழிப்புரை: தீர்த்தங்களில் இருக்கற்பாலதாய நீரை சடையிலே உடைய சிவபெருமான் அணிந்துள்ள பிறை போலும்
|