பக்கம் எண் :

175திருவாரூர் மும்மணிக்கோவை

இடப்பால் திரியின் வெருவும்; இருஞ்சுரஞ் சென்றனளால்
படப்பா லனஅல்ல வால்தமி யேன்தையல் பட்டனவே. 

15

அகவற்பா

284.பட்டோர் பெயரும் ஆற்றலும் எழுதி
நட்ட கல்லும் மூதூர் நத்தமும்
பரல்முரம் பதரும் அல்லது படுமழை
வரல்முறை அறியா வல்வெயிற் கானத்துத்
5.தேன்இவர் கோதை செல்ல மானினம்

அம்சில் ஓதி நோக்கிற்கு அழிந்து
நெஞ்செரி வுடைமையின் விலக்காது விடுக;
கொங்கைக்(கு) அழிந்து குன்றிடை அடைந்த
கொங்கிவர் கோங்கமுஞ் செலவுடன் படுக;

10.மென்றோட்(கு) உடைந்து வெயில்நிலை நின்ற

குன்ற வேய்களும் கூற்றடைந் தொழிக;
மாயிருங் கடற்றிடை வைகல் ஆயிரம்
பாவையை வளர்ப்போய் நீநனி பாவையை
விலக்காது பிழைத்தனை மாதோ! நலத்தகும்

15.அலைபுனல் ஆரூர் அமர்ந்துறை அமுதன்

கலையமர் கையன் கண்ணுதல் எந்தை
தொங்கலஞ் சடைமுடிக் கணிந்த
கொங்கலர் கண்ணி யாயின குரவே. 

16


நெற்றியை யுடைய, பேதைமைப்பாலளாகிய என் மகள் இயல்பாக மலர் அணையாகிய படுக்கையினின்றும் சிறிது வெறுத்து நீங்கி இடம் மாறினாலும் அஞ்சி வருந்துவாள். அத்தகையவள் இப்பொழுது பெரிய பாலை நிலத்திலே நடந்து சென்றாள். தமியேன் மகள் இப்பொழுது அடைந்த துன்பங்கள் அவள் அடையத் தக்கன அல்ல.

குறிப்புரை: இதுவும் மேல் வந்த துறையே. “தடப்பாற் புனல்” என்றது, ‘ஆகாய கங்கை’ என்றபடி. “முகம்” என்றது நெற்றியை. இங்கு உவமிக்கப்படுதற்கு உரியது அதுவேயாகலின். பாசம் - விருப்பம். அதனைப் பிரிதலாவது அதன்மேற்றானே கிடத்தலைச் சிறிது வெறுத்தலாம். பிரீஇ - பிரிந்து.

284. பொழிப்புரை: நலத்தால் தகுதிப் பட்ட, அலையும் நீரையுடைய திருவாரூரில் விரும்பி உறைகின்ற அமுதமாகிய வனும்,