வெண்பா 285. | குரவங் கமழ்கோதை கோதைவே லோன்பின் விரவுங் கடுங்கானம் வெவ்வாய் - அரவம் சடைக்கணிந்த சங்கரன் தார்மதனன் றன்னைக் கடைக்கணித்த தீயிற் கடிது. | | 17 |
மான் பொருந்திய கையை உடையவனும், கண் பொருந்திய நெற்றியை உடையவனும் ஆகிய எம் தந்தை கொன்றை மாலையோடு ஒக்க அணிந்த கண்ணியாதற்கு அமைந்த நறுமணத்தொடு கூடிய மலர்களையுடைய குராமரமே, போரில் இறந்து பட்டோரது பெயர்களையும், அவர் செய்த வீரச் செயல்களையும் எழுதி நடப்பட்ட கற்களும், பழையனவாகிய குடில்களையுடைய சீறூர்களும், பரற்கள் நிறைந்த அருவழிகளும் அல்லது, வானின்றும் வீழ்கின்ற பெய்தலை ஒரு காலத்தும் கண்டிராத மிக்க வெயிலையுடைய சுரத்தில்; தேன் ததும்பும் மாலையை அணிந்த என் மகள் செல்லும் பொழுது மான் கூட்டம் அவளது பார்வைக்குத் தோற்றுப் போன பகைமையால் மனம் வெதும்பி விலக்காதுபோகட்டும்; அவளது கொங்கைகளுக்குத் தோற்றுப் போய் மலையிடத்தே ஓடி நின்ற, மணம் மிக்க மலர்களையுடைய கோங்க மரங்கள் அவளை விலக்காமல் பார்த்துக் கொண்டிருக்கட்டும்; அவளது மெல்லிய தோள் களுக்குத் தோற்றுப் போய் வெயிலிலே நின்று வருந்துகின்ற மூங்கில்கள் அவளை விலக்காமல் ஓரிடத்திலே ஒதுங்கி யிருக்கட்டும்; பெரிய சுரத்திடையிலே நாள்தோறும் ஆயிரம் பாவைகளைப் பெற்று வளர்க்கின்ற நீ அவளை விலக்காது குற்றதிற்கு மிகவும் ஆளாயினை. குறிப்புரை: ‘இது நன்றோ’ என்றபடி. குராமலர் பாவை போலத் தோன்றுதலின், அது பாவையைப் பெற்று வளர்ப்ப தாக இலக்கியங்களில் கூறப்படும். ‘பாவையைப் பெற்று வளர்க்கும் அன்பின்மேலும், உனது மலரைச் சிலர் விரும்பி யணியும் தகுதியையும் உடையையன்றோ’ என்றற்கு, “எந்தை அணிந்த கண்ணியாயின குரவே” என்றாள். ‘அணிந்த கண்ணிக் கொங்கலர் குரவே’ என மாற்றியுரைக்க. “குரா மலரோடு அரர் மதியம் சடைமேற் கொண்டார்”1 என்னும் திருமுறையால் குராமலர் இறைவனுக்கு இனிதாதல் அறிக. இது மேலைத் துறையில் குரவொடு புலம்பல். 285. பொழிப்புரை: குரா மலர் மணம் கமழ்கின்ற மாலையை அணிந்த என் மகள் மாலை யணிந்த வேலை ஏந்தியவன் பின்னே சென்ற கடிய சுரம், கொடிய நஞ்சு பொருந்திய வாயையுடைய பாம்பைச் சடையிலே அணிந்த சிவபெருமான், மாலை யணிந்த
1. திருமுறை - 6.96.11.
|