பக்கம் எண் :

177திருவாரூர் மும்மணிக்கோவை

கட்டளைக் கலித்துறை

286.

கடிமலர்க் கொன்றையுந் திங்களுஞ் செங்கண் அரவும்அங்கண்
முடிமலர் ஆக்கிய முக்கணக் கன்மிக்க செக்கரொக்கும்
படிமலர் மேனிப் பரமன் அடிபர வாதவர்போல்
அடிமலர் நோவ நடந்தோ கடந்ததெம் அம்மனையே. 

18

அகவற்பா

287.

மனையுறைக் குருவி வளைவாய்ச் சேவல்
சினைமுதிர் பேடைச் செவ்வி நோக்கி
ஈன்இல் இழைக்க வேண்டி ஆனா
அன்புபொறை கூர மேன்மேல் முயங்கிக்

5.கண்ணுடைக் கரும்பின் நுண்தோடு கவரும்

பெருவளந் தழீஇய பீடுசால் கிடக்கை
வருபுனல் ஊரன் பார்வை யாகி
மடக்கொடி மாதர்க்கு வலையாய்த் தோன்றிப்
படிற்று வாய்மொழி பலபா ராட்டி

10.

உள்ளத் துள்ளது தெள்ளிதின் சுரந்து


மன்மதனை நெற்றிக் கண்ணால் சிறிதே நோக்கிய பொழுது எழுந்த தீயினு கொடியது.

குறிப்புரை: ‘அதில் அவள் எப்படிச் சென்றாள்’ என்றபடி. இதுவும் செவிலி புலம்பல்.

286. பொழிப்புரை: எம் தாய் (மகள்) சுரத்தைக் கடந்தது, வாசனை பொருந்திய கொன்றையோடு திங்கள், சிவந்த கண்களையுடைய பாம்பு இவைகளையும் முடியில் அணியும் மலராகக் கொண்டு அணிந்துள்ள, மூன்று கண்களையுடைய திகம்பரனும், செவ் வானம் போலும் மெல்லிய மேனியை உடையவனும் ஆகிய சிவபெருமானது திருவடி மலர்களைத் துதியாதவர்கள் போலப் பாதங்களாகிய தாமரை மலர்கள் நோகும்படி நடந்தேயோ!

குறிப்புரை: இதுவும் மேலைத் துறை.

287. பொழிப்புரை: பாணனே, இல்லங்களில் வாழும் குருவிகளில் வளைந்த அலகினையுடைய ஆண் குருவி ஒன்று தன்