பக்கம் எண் :

179திருவாரூர் மும்மணிக்கோவை

வெண்பா

288.பாலாய சொல்லியர்க்கே சொல்லு,போய்ப்; பாண்மகனே,
ஏவா,இங்(கு) என்னுக்(கு) இடுகின்றாய்? - மேலாய
தேந்தண் கமழ்கொன்றைச் செஞ்சடையான் தாள்சூடும்
பூந்தண் புனலூரன் பொய். 

20

கட்டளைக்கலித்துறை

289.பொய்யால் தொழவும் அருளும் இறைகண்டம் போல்இருண்ட
மையார் தடங்கண் மடந்தையர் கேட்கிற்பொல் லாதுவந்துன்
கையால் அடிதொடல்; செல்வனில் புல்லல், கலையளையல்
ஐயா, இவைநன்கு கற்றாய் பெரிதும் அழகியவே. 

21


“மனை வாய்ச் சேவற்குருவிதன் பெடையை அடிக்கடி தழுவித் தலையளி செய்து, ஈன் இல் இழைக்கக் கரும்பின் நுண்தோடு கவரும் ஊரன்” என்றது, ‘அக்குருவியின் அன்பு தானும் உன் தலைவனுக்கு இல்லை’ எனத் தலைவி உள்ளுறையாகக் கழற்றுரை கூறினாள். அவ்வுள்ளுறைக்கண் பொதியப்பட்ட பொருளானே தலைவிபுதல்வனைப் பெறும் நிலையில் இருத்தலும், தலைவன் அதனையும் நோக்காது புறத்தொழுக்கின ஆயதும் பெறப்பட்டன. ஈன் இல், வினைத் தொகை.

288. பொழிப்புரை: ஏ பாண்மகனே, ‘மேலாய, இனிய, தண்ணிய கொன்றை மலரைச் சூடியுள்ள சிவபெருமானது திருவடிகளை யான் தலைமேற்கொள்பவன்; பொய்கூறேன்; உண்மையில் என்மேல் தவறு ஒன்றும் இல்லை’ என்று தலைவன் கூறிய பொய்களை யெல்லாம் இங்கே வந்து எதற்குக் ‘கொட்டுகின்றாய்? இங்கே அவைகள் ஏலா. யாருடைய சொல் தலைவனுக்குப் பால்போல இனிக்கின்றதோ அவர்களிடத்தில் போய் அவைகளைச் சொல்லு; (கேட்டுக் கொள்வார்கள்.)

குறிப்புரை: இதுவும் மேலைத் திணை; துறை. “சூடும்” என்றது, ‘சூடுவேன்’ எனச் சொல்வானது சொற் பற்றிக் கூறியது.

289. பொழிப்புரை: தலைவனே, இங்கே உன் கையினால் எம் காலைத் தொட்டு வணங்க வேண்டா. மகனை அன்போடு அணைப்பது போலக் காட்டி, அவ்வழியாக வந்து எம்மைச் சார வேண்டா எம் உடையைப் பற்றி அலைக்கழிக்க வேண்டா ஏனெனில் பொய்யாக வணங்கினாலும் அதற்கு அருள்செய்கின்ற சிவபெருமானது கண்டம் போலக் கறுத்த மைதீட்டிய, அகன்ற கண்களையுடைய உன் காதலிகள் இவற்றைக் கேள்விப்பட்டால் உனக்கு இடராய் முடியும். காதல் இன்றியும் உடையவன்போல