அகவற்பா 290. | அழகுறு கிண்கிணி அடிமிசை அரற்றத் தொழிலுடைச் சிறுபறை பூண்டு தேர்ஈர்த்(து) ஒருகளி(று) உருட்டி ஒண்பொடி ஆடிப் பொருகளி றனைய பொக்கமொடு பிற்றாழ்ந்த | 5. | பூங்குழற் சிறாரொடு தூங்குநடை பயிற்றி அக்கரை உடுத்தி ஐம்படை கட்டி ஒக்கரை இருக்கும் ஒளிர்புன் குஞ்சிக் குதலையங் கிளவிப் புதல்வன் தன்னை உள்ளச் சொரிந்த வெள்ளத் தீம்பால் | 10. | உடைய வாகிய தடமென் கொங்கை வேண்டாது பிரிந்த விரிபுனல் ஊரன் பூண்தாங்(கு) அகலம் புல்குவன் எனப்போய்ப் பெருமடம் உடையை; வாழி! வார்சடைக் கொடுவெண் திங்கட் கொழுநில வேய்க்கும் | 15. | சுடுபொடி யணிந்த துளங்கொளி அகலத்(து) அண்ணல் ஆரூர் திண்ணிதிற் செய்த சிறைகெழு செழும்புனல் போல நிறையொடு நீங்காய்; நெஞ்சம் நீயே. | | 22 |
நடித்தற்கு இச்செயல் களை யெல்லாம் நன்கு கற்றிருக்கின்றாய் இம்முறைமை உனக்கு மிகவும் அழகியவாய் உள்ளன. குறிப்புரை: இது, பள்ளியிடத்து ஊடலில் புதல்வன் வாயிலாகத் தலைவன் ஊடல் தணிவிக்கத் தலைவி ஊடல் தணியாளாகக் கூறியது. இதுவும் மருதத் திணை. 290. பொழிப்புரை: நெஞ்சே, அழகுடையவாகிய கிண்கிணி கள் அடிமேல் ஒலிக்க, அடிக்கத் தக்கதாகிய சிறுபறையைத் தோளில் மாட்டிக்கொண்டு, சிறுதேரை இழுத்துக் கொண்டும், யானையாகச் செய்யப்பட்ட அதனை உருட்டிக்கொண்டும், தெருப் புழுதியிலே முழுகி, போர்செய்தற்குரிய ஆண் யானை தன் பெண்யானையினிடத்துக் கொள்ளும் இன்பம் போலும் இன்பத்தை உள்ளத்தில் எய்தி, தன்னைப் பின்பற்றிவரும், அழகிய கால் அணிகளை அணிந்த மற்றைச் சிறுவர்களுடன் சாய்ந்து சாய்ந்து நடக்கும் நடை பழகி, ஓரங்களில் கரையை உடைய சிறுதுண்டை இடையிலே சுற்றிக்கொண்டு, கழுத்திலே ஐம்படைத்தாலி அணிந்து,
|