பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை182

கட்டளைக் கலித்துறை

292.திறமலி சின்மொழிச் செந்துவர் வாயின எங்கையர்க்கே
மறவலி வேலோன் அருளுக; வார்சடை யான்கடவூர்த்
துறைமலி ஆம்பல்பல் லாயிரத் துத்தமி யேயெழினும்
நறைமலி தாமரை தன்னதன் றோசொல்லும் நற்கயமே. 

24

அகவற்பா

293.கயங்கெழு கருங்கடல் முதுகுதெரு மரலுற
இயங்குதிமில் கடவி எறிஇளி நுளையர்
நெய்ம்மீன் கவரல் வேண்டிக் கைம்மிகுத்(து)
ஆல வட்டம் ஏய்ப்ப மீமிசை
5.முடிகெழு தருவலை வீசி முந்நீர்க்

செய்வு - செய்தல்; தொழிற் பெயர். இஃது அறப்புறம் காவற் பிரிவில் ஆற்றாளாய தலைவி தலைவன் உள்வழிச் செல்ல நினைந்து நெஞ்சத்தோடு கூறியது. இதுவும் பாலைத் திணையே.

292. பொழிப்புரை: நீண்ட சடையை உடைய சிவபெரு மானது திருக்கடவூரில் உள்ள குளத்தில் அதன் துறைகளில் நிறைய பல ஆயிரம் ஆம்பல் மலர்கள் பூத்திருக்க, அவற்றின் இடையில் மணம் மிக்க தாமரை மலர் ஒன்றே பூத்திருப்பினும் அந்தக் குளம் ‘தாமரைக் குளம், என்றுதானே புகழப்படும்? ஆகையால் வீரம் அமைந்த வேலை ஏந்திய தலைவன் எமக்கு அருள் பண்ணாமல், திறமை நிறைந்த சில சொற்களையும் சிவந்த வாயினையும் உடைய எம் தங்கை மார்க்கே அருள் பண்ணட்டும்; (தலைவனாதல் எமக்குத்தானே? அவர்கட்கு ஏது?)

குறிப்புரை: குளத்திற்குச் சிறப்புத் தருவது தாமரை மலரே ஆகையால் அதைக் குறித்துத் தான் குளத்தை, ‘தாமரைக் குளம்’ எனப் பெருமையாகக் கூறுவார்கள். அதுபோல இல்லறத்திற்குத் துணையாகின்றவள் தலைவியே ஆகையால் ‘அவளுக்குத் தலைவன்’ எனச் சொல்லியே தலைவனை யாவரும் பாராட்டுவர் - என்றபடி. எனவே, இப்பாட்டில், “வார்சடையான்” என்பது முதலாக உள்ள பகுதி ஒட்டணியாம். இது, பரத்தையிற் பிரிவில் ‘தலைவி ஆற்றாள்’ எனக் கவன்ற தோழிக்குத் தலைவி ‘ஆற்றுவல்’ என்பதுபடக் கூறியது. எனவே இது முல்லைத் திணையாம். “தன்னது” என்பதில் தன், சாரியை. அதில் ஒற்று இரட்டியது செய்யுள் விகாரம். ‘தனதாக’ என ஆக்கம் விரிக்க. “சொல்லும்” என்பது ‘சொல்லப்படும்’ எனச் செயப்பாட்டுவினைப் பொருள் தந்தது.

293. பொழிப்புரை: ஆழம் பொருந்திய கரிய கடலின் முதுகு அலையும்படி அலைத்துச் செல்கின்ற ஓடங்களைச் செலுத்திய ‘இளி’