| குடரென வாங்கிக் கொள்ளை கொண்ட சுரிமுகச் சங்கும் சுடர்விடு பவளமும் எரிகதிர் நித்திலத் தொகுதியுங் கூடி விரிகதிர் நிலவுஞ் செக்கருந் தாரகை | 10. | உருவது காட்டும் உலவாக் காட்சித் தண்ணந் துறைவன் தடவரை அகலம் கண்ணுறக் கண்டது முதலா, ஒண்ணிறக் காள மாசுணங் கதிர்மதிக் குழவியைக் கோளிழைத் திருக்குங் கொள்கை போல | 15. | மணிதிகழ் மிடற்று வானவன் மருவும் அணிதிகழ் அகலத்(து) அண்ணல் ஆரூர் ஆர்கலி விழவின் அன்னதோர் பேர்செலச் சிறந்தது சிறுநல் லூரே. | | 25 |
என்னும் ஒருவகை ஒலியை வாயினின்றும் எழுப்புகின்ற வலைஞர்கள், ‘நெய்ம்மீன்’ என்னும் ஒருவகை மீனைப் பிடிக்க வேண்டிக் கைமிகுந்து முடிச்சுகள் பொருந்திய வலையை ஆலவட்டம் போலத்தோன்றும்படி மிக உயரத்திலே சென்று வீழ வீசி, வீசிய வலைகள் கடலின் குடர்பலாத் தோன்றும்படி வெளியே இழுத்து வாங்கும் பொழுது அவ்வலையில் அகப்பட்ட குவிந்த முனையை யுடைய சங்கும், ஒளி வீசுகின்ற பவளமும், பொற்கதிரைப் பரப்புகின்ற முத்துக் களும் ஆகிய இவற்றின் தொகுதிகள் ஒருங்கு தொக்கு, வெள்ளொளியைப் பரப்புகின்ற திங்களும், செவ்வானமும், விண்மீன்களும் ஆகிய இவைகளின் உருவத்தைத் தோற்று விக்கின்ற, கெடாத காட்சியையுடைய, குளிர்ந்த, அழகிய துறையை யுடைய தலைவனது அகன்ற மார்பினை ஒருமுறை கண்ணுறக் கண்டு, அங்ஙனம் கண்டது முதலாக இந்தச் சிறிய நல்ல ஊர், ஒளிபொருந்திய நிறத்தையுடைய கரும்பாம்பு இளந் திங்களை, ‘அது முதிரட்டும், முதிரட்டும்,’ என்று விடாது பார்த்துக்கொண்டிருப்பது போல என்னைப் பற்றி விடாது எவற்றையேனும் சொல்லி, நீலமணிபோல விளங்குகின்ற கண்டத்தையுடைய பெருமான் எழுந்தருளியுள்ள, அழகு விளங்கும் விசாலித்த திருவாரூரில், நிறைந்த ஆரவாரத்தோடு கூடிய திருவிழாவில் அத்தலப் பெருமானது ஒருபெயரே எங்கும் ஒலித்தல்போலத் துறைவனது ஒரு பெயரே எங்கும் ஒலிக்கின்ற சிறப்பினை உடையதாயிற்று. குறிப்புரை : “இவ்வூரவர்க்குத் தொழில் வேறு இல்லை போலும்’ என்பது குறிப்பெச்சம். இது வரையா நாளின் வந்தோன் முட்டிடக் கண்ட ஆயத்தார் அலர் கூறுதல் அறிந்த தலைவி முன்னிலைப்
|