அகவற்பா 296. | உலாநீர்க் கங்கை ஒருசடைக் கரந்து புலால்நீர் ஒழுகப் பொருகளி றுரித்த பூத நாதன், ஆதி மூர்த்தி, திருமட மலைமகட்(கு) ஒருகூறு கொடுத்துத்தன் | 5. | அன்பின் அமைத்தவன் ஆரூர் நன்பகல் வலம்புரி அடுப்பா மாமுத் தரிசி சலஞ்சலம் நிறைய ஏற்றி நலந்திகழ் பவளச் செந்தீ மூட்டிப் பொலம்பட இப்பியந் துடுப்பால் ஒப்பத் துழாவி | 10. | அடாஅ(து) அட்ட அமுதம் வாய்மடுத் திடாஅ ஆயமோடு உண்ணும் பொழுதில் திருந்திழைப் பணைத்தோள் தேமொழி மாதே, விருந்தின் அடியேற்(கு)ருளுதி யோஎன முலைமுகம் நோக்கி முறுவலித் திறைஞ்சலின் | 15. | நறைகமழ் வெண்ணெய்ச் சிறுநுண் துள்ளி பொங்குபுனல் உற்றது போலஎன் அங்க மெல்லாந் தானா யினனே. | | 28 |
நினைத்தால் மனம் நெகிழ்ந்துருகும்படி, துள்ளு கின்றமானைக் கையில் ஏந்திய, தீ வண்ணனாகிய சிவபெரு மானை வணங்குகின்றவர்களுடைய மனம் அப்பெரு மானிடத்தே எவ்வாறு ஓய்வின்றி உலவுமோ அதுபோல ஒருவருடைய திண்ணிய தேர்வந்து வந்து உலாவாநின்றது. குறிப்புரை: ‘ஊழது நிலை இவ்வாறாயிற்று’ என்பது குறிப்பெச்சம். இஃது இரவுக் குறிக்கண் அல்ல குறிப்பட்டுத் தலைவனை எய்தாளாய தலைவி பின், வந்தவன் பெயர்ந்த வறுங்களம் நோக்கித் தன் பிழைப்பாகத் தழீஇத் தேறிக் கூறியது. இது குறிஞ்சித் திணை. இறுமாத்தல், இங்குச் செயலின்றி மடிந்திருத்தல். ‘உள்ளும்’ என்னும் உம்மை, உயர்வு சிறப்பு. 296. பொழிப்புரை: (தோழீ, கேள்) பாய்ந்து செல்வதாகிய கங்கை நீரை ஒரு சடையிலே ஒளித்துவைத்தும், போர் செய்வ தாகிய ஆண் யானை ஒன்றை உதிரம் ஒழுக உரித்தும் தன் ஆற்றலைப் புலப்படுத்திய, பூதப் படைத் தலைவனும், யாவர்க்கும் முன்னேயுள்ள மூர்த்தியும், அழகிய, இளைய மலைமகட்குத் தனதுதிருமேனியில் பாதியைத் தந்து அன்பினாலே அவளை உடன்கொண்டு
|