வெண்பா 297. | ஆயினஅன்(பு) ஆரே அழிப்பர்? அனலாடி பேயினவன் பார்ஓம்பும் பேரருளான் - தீயினவன் |
இருப்பவனும் ஆகிய சிவபெருமானது இத்திருவாரூரிலே (நாம் தெருவில் விளையாடுகின்ற பருவத்திலே நீ ஒருநாள் அன்னையோடு இருக்க நான் ஆயத்தாருடன் தெருவில்) வலம்புரிச் சங்குகளை அடுப்பாகக் கூட்டி, சலஞ்சலச் சங்கினைப் பானையாக ஏற்றி, அது நிறையச் சிறந்த முத்துக்களை அரிசியாக இட்டு, பவழங் களைச் சிவந்த தீயாக மூட்டி அழுகு உண்டாக இப்பியை அகப்பையாக இட்டு நன்றாகத் துழாவி இவ்வாறு உண்மை யாகச் சமைக்காமல் பொய்யாகச் சமைத்த சோற்றினை வாயில் இடாமலே நான் ஆயத்தாருடன் உண்ணப் போகும் பொழுது (சிறான் ஒருவன் வந்து) திருத்தமான அணிகளையும், பருத்த தோள்களையும், தேன்போன்ற சொற்களையும் உடைய மாதே, உங்கள் சிற்றில் அயர்வின்கண் விருந்து ஒன்று இல்லாத குறையை யான் நிரப்புதற்கு அருள்செய்வாயோ” என்று வினவி, என் கொங்கையின் முகங்களை நோக்கி, உள்ளத்து ஆசை வெளிப்படும்படி சிரித்து, என் அடிகளில் வீழ்ந்து வணங்கினான். அவனது செயல், நறுமணம் கமழும்படி காய்ச்சப்படுகின்ற வெண்ணெயிலே சிறிய, நுண்ணிய நீர்த்துளி ஒன்று வீழின் அந்நெய் முழுதும் அதனாலே ஆரவாரித்துப் பொங்குதல்போல யான் என் உடம்பு முழுதும் அவனாகி விட்டது போலும் உணர்ச்சியை அடைந்தேன். குறிப்பு: ‘இஃது இளமைக் காலத்தில் நிகழ்ந்தது’ என்பது இசையெச்சம். ‘இதனை நம் தாய்க்கு நீ சொல்லுதல் வேண்டும்’ என்பது குறிப்பு. இது களவொழுக்கத்தில் அது வெளிப்படாத வகையில் ஒழுகிய தலைவி தமர் வேற்று வரைவிற்கு முயல்வதை அறிந்து தானே தன் தோழிக்குப் படைத்து மொழியால் அறத்தொடு நின்றது. இதுவும் குறிஞ்சித் திணை "பூத நாதன்” என்பதற்கு, ‘உயிர்கட்கு முதல்வன்’ என உரைத்தலும் ஆம். தனது ஊரையே வேறுபோலக் கூறினார். ஆதலின், “இவ் ஆரூர்” எனச் சுட்டுவருவித்துக் கண்ணுருபு விரிக்க ‘நல்லதொரு விளையாட்டு நிகழ்ந்த பகல்’ என்பாள் பகலை, “நண்பகல்” எனச் சிறப்பித்துக் கூறினார். “துடுப்பு” என்றா ராயினும் சோற்றைத் துழாவுவது அகப்பையேயாதல்பற்றி அதற்கு அவ்வாறு உரைக்கப்பட்டது. ‘வாய் மடுத்திடா’ என்பது ஒருசொல். ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். ‘துளி’ என்பது “துள்ளி” என விரித்தல் பெற்றது. தான் - அவன் “ஆயினன்” என்பது தன்மை யொருமை வினைமுற்று. 297. பொழிப்புரை: தீயில் நின்று ஆடுபவனும், பேய்க் கூட்டத்தை உடையவனும், உலகத்தைக் காக்கும் பேரரு ளாளனும்,
|