பக்கம் எண் :

187திருவாரூர் மும்மணிக்கோவை

கண்ணாளன் ஆரூர்க், கடலார் மடப்பாவை
தண்ணாருங் கொங்கைக்கே தாழ்ந்து. 

29

கட்டளைக் கலித்துறை

298.தாழ்ந்து கிடந்த சடைமுடிச் சங்கரன் தாள்பணியா(து)
ஆழ்ந்து கிடந்துநை வார்கிளை போல்அய் வேற்கிரங்கிச்
சூழ்ந்து கிடந்த கரைமேல் திரையென்னும் கையெறிந்து
வீழ்ந்து கிடந்தல றித்துயி லாதிவ் விரிகடலே. 

30

திருச்சிற்றம்பலம்


நெருப்புப் பொருந்திய கண்ணை உடையவனும் ஆகிய சிவபெருமானது திருவாரூரோடு ஒத்த, கடற்கரைக் கண் உள்ள, இளைய பரவை போல்வாளது குளிர்ச்சி நிறைந்த கொங்கையின் கண்ணே தங்கிவிட்ட அன்பினை இனி அழிப்பவர் யார்?

குறிப்புரை: இது, குற்றம் காட்டிய வாயில் பெட்ப (கழற்றுரை கூறிய பாங்கன் பின் தன்னை விரும்பும்படி) தலைவன் தன் ஆற்றாமை கூறிக் கழற்றெதிர் மறுத்தது. இது நெய்தலிற் குறிஞ்சி மயங்கியது. “ஆடி” என்பது பெயர் “பேயினவன்” என்பதில் ‘இன்’ சாரியை; அகரம் பெயரெச்ச விகுதி ‘வன்கண்’ என்க. ‘ஆரூர் போலும் மடப்பாவை’ என்க. கொங்கைக்கு, ‘கொங்கைக்கண்’ என உருபு மயக்கம். தாழ்ந்து ‘ஆயின அன்பு’ என மேலே கூட்டுக. தாழ்தல் - தங்குதல்.

298. பொழிப்புரை: தாழ்ந்து தொங்குகின்ற சடைமுடியை உடைய, ‘சங்கரன்’ என்னும் பெயரினன் ஆகிய சிவபெரு மானது திருவடிகளை வணங்காமையால் துன்பத்தில் ஆழ்ந்து கிடந்து வருந்துவாரது சுற்றம் போல வருந்துகின்ற என்பொருட்டு இரங்கி இந்த அகன்ற கடல் தன்னைச் சூழ்ந்து கிடக்கின்ற கரைமேல் அலைகளாகிய கையை அடித்து அடித்து, தரைமேல் வீழ்ந்து, வாய்விட்டு அலறிக் கொண்டு உறங்காமல் உள்ளது.

குறிப்புரை: ‘பிறர் ஒருவரும் என்பொருட்டு இரங்குவார் இல்லை’ என்பது கருத்து. இது, ‘தாளாண் எதிரும் பக்கம்’ எனப்படும். பொருள்வயிற் பிரிவின்கண் தலைவன் நீட ஆற்றாளாய தலைவி தூது செல்லாத பாங்கியைப் புலந்து கடலை முன்னிலைப் படுத்துக் கூறி இரங்கியது. இதனை, ‘காமம் மிக்க கழிபடர் கிளவி’ என்பர். இது நெய்தல் திணை. பணியாதவரே யன்றி அவர் சுற்றமும் வந்தும் நிலையை உடைத்தாதல் பற்றி, “நைவார் கிளைபோல் அயர்வேற்கு” என்றாள்.

திருவாரூர் மும்மணிக்கோவை முற்றிற்று