2. | பிறவாதே தோன்றினான்; காணாதே காண்பான்; துறவாதே யாக்கை துறந்தான் - முறைமையால் |
3. | ஆழாதே ஆழ்ந்தான்; அகலா(து) அகலியான்; ஊழால் உயராதே ஓங்கினான் - சூழொளிநூல் |
4. | ஓதா துணர்ந்தான்; நுணுகாது நுண்ணியான் யாதும்அணுகா துஅணுகியான்; - ஆதி |
5. | அரியாகிக் காப்பான்; அயனாய்ப் படைப்பான்; அரனாய் அழிப்பவனுந் தானே - பரனாய |
6. | தேவர் அறியாத தோற்றத்தான்; தேவரைத்தான் மேவிய வாறே விதித்தமைத்தான்; - ஓவாதே |
7. | எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள் அவ்வுருவாய்த் தோன்றி அருள்கொடுப்பான்; - எவ்வுருவும் |
8. | தானேயாய் நின்றளிப்பான்; தன்னிற் பிறிதுருவம் ஏனோர்க்குக் காண்பரிய எம்பெருமான்; - ஆனாத |
இறைவன் மேல் அடிநிமிர் கிளவியாய் ஓர் யாப்பான செய்யுளால் அமைந்த முதல் உலா இதுவே யாதலின் இஃது, ‘ஆதியுலா’ என்றும் வழங்கப்படும். ‘இதன் ஆசிரியராகிய சேரமான் பெருமாள் நாயனார் வெள்ளை யானைமேற் சென்ற தம் தோழ ராகிய சுந்தரருடன் தாம் குதிரைமேற் சென்று கைலையை அடைந்தபொழுது, கைலைப் பெருமான் அருள்கூர்ந்து திருச்செவி சாத்தியருள அப்பெருமான் திருமுன்பில் நாயனார் அரங்கேற்ற, அங்கிருந்து இதனைக் கேட்ட ஐயனார் திருப்பிடவூரில் வந்து இதனை மண்ணுலக மக்களுக்கு அருளிச் செய்தார்’ என்னும் வரலாற்றினைப் பெரிய புராணத்துட் காண்க. இதனானே, “ஞாலம் அளந்த மேன்மைத் தமிழ்”1 எனச் சேக்கிழார் அருளிச் செய்தபடி தமிழ்மொழி திருக்கைலை அளவும் சென்று விளங்கும் சிறப்பினதாதலும் விளங்கும். கண்ணி - 1: அரு மால் - போக்குதற்கு அரிய மயக்கம். அழலாய் - அக்கினிப் பிழம்பாய். மாலும், அயனும் அடிமுடி தேடிய சிவபுராண வரலாறு பலவிடத்தும் பரவலாக வழங்கும். கண்ணி 2-8: இப்பகுதியில் சிவபெருமானது பெருமைகள் விரித்துரைக்கப்படுகின்றன. ‘பிறர் செயற்கையால் அடையும்
1. மேற்படி - திருச்சதகம் - 16
|