காரைக்கால் அம்மையார் அருளிச்செய்த 3. திருஇரட்டைமணிமாலை திருச்சிற்றம்பலம் 24. | கிளர்ந்துந்து வெந்துயர் வந்தடும் போதஞ்சி நெஞ்சமென்பாய்த் தளர்ந்திங் கிருத்தல் தவிர்திகண் டாய்தள ராதுவந்தி வளர்ந்துந்து கங்கையும் வானத் திடைவளர் கோட்டுவெள்ளை இளந்திங் களும்எருக் கும்இருக் குஞ்சென்னி ஈசனுக்கே. | | 1 |
25. | ஈசன் அவனல்லாது இல்லை எனநினைந்து கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து - பேசி மறவாது வாழ்வாரை மண்ணுலகத் தென்றும் பிறவாமைக் காக்கும் பிரான். | | 2 |
24. கட்டளைக் கலித்துறையும், நேரிசை வெண்பாவும் அந்தாதியாய் மாறி மாறி வர இருபது பாடல்களால் தொகுக்கப்படுவது. ‘இரட்டைமணி மாலை’ என்னும் பிரபந்தம் ஆகும். அ. சொ. பொ.: ‘நெஞ்சமே ஈசனுக்கே வந்தி; வெந்துயர் வந்து அடும்போது அஞ்சி, என்பாய் இங்குத் தளர்ந்திருத்தலைத் தவிர்தி’ என இயைத்துக்கொள்க. வெந்துயர் கிளர்ந்து. வந்து அடும் போது - கொடிய துன்பம் மிகுந்து வந்து வருத்தும்போது. என்பாய்த் தளர்ந் திருத்தல் - உடம்பு எலும்பாய் இளைத்துப் போகும்படி மெலிந் திருத்தல். வளர்ந்து உந்து கங்கை - பெருகி மோதுகின்ற கங்கை. கோட்டுத் திங்கள் - வளைவையுடைய சந்திரன். “ஈசனுக்கு” என்பதை, ‘ஈசனை’ எனத் திரிக்க. தளராது வந்தி - மனம் சலியாது வணங்கு. ‘சிவனை மனம் சலியாது வணங்குவாரைத் துயர்வந்து அணுகாது’ என்றதாம். 25. அ. சொ. பொ.: ஈசன் - ஐசுவரியம் உடையவன்; அஃதாவது, உயிர்களாகிய அறிவுடைப் பொருள்களை அடிமைகளாகவும், ஏனை அறிவிலாப் பொருள்களை
|