| 41. | வேழ முகத்து விநாயகனை உள்ளுறுத்தச் சூழ்வளைக்கைத் தொண்டைவாய்க் கெண்டையொண்கண் தாழ்கூந்தல் |
| 42. | மங்கை எழுவருஞ் சூழ மடநீலி சிங்க அடலேற்றின் மேற்செல்லத் - தங்கிய |
| 43. | விச்சா தரர்இயக்கர் கின்னரர் கிம்புருடர் அச்சா ரணர்அரக்க ரோடுஅசுரர் - எச்சார்வும் |
| 44. | சல்லரி தாளம் தகுணிதம் தத்தளகம் கல்லலகு கல்ல வடமொந்தை - நல்லிலயத் |
| 45. | தட்டழி சங்கம் சலஞ்சலந் தண்ணுமை கட்டழியாப் பேரி கரதாளம் - கொட்டும் |
| 46. | குடமுழவம் கொக்கரை, வீணை, குழல்யாழ் இடமாம் தடாரி படகம் - இடவிய |
| 47. | மத்தளம் துந்துபி வாய்ந்த முரு(டு)இவற்றால் எத்திசை தோறும் எழுந்தியம்ப, - ஒத்துடனே |
“மங்கை” என்பது அப்பருவத்தைக் குறித்தது. எழுவர் - சத்தமாதர். இவருள் காளியும் ஒருத்தியாயினும் அவளைத் தலைவியாக வேறு பிரித்துக் கூறுதலின் அவளுக்கு ஈடாகத் துர்க்கையைக் கொள்க. எழுவர் மாதாரவார் பிராம்மி, வைணவி, மாகேசுவரி, கௌமாரி, இந்திராணி, வாராகி, காளி, பிராம்மி, ‘அபிராமி’ என்றும், வைணவி ‘நாராயணி’ என்றும் சொல்லப்படுவர். நீலி - காளி. மடம் - இளமை. கண்ணி - 43, 44: விச்சாதரர் முதல் அசுரர் ஈறாகச் சொல்லப்பட்டவர்கள் தேவ சாதியினர். இவர் முதலாகப் பதினெண்கணங்கள் சில இடங்களில் சொல்லப்படும். விச்சாதார் வித்தியாதரர். ‘கந்திருவர்’ என்றும் சொல்லப் படுவர். இயக்கர் - யட்சர். யட்சனுக்குப் பெண்பால் யட்சிணி தேவ சாதியினருள் யட்சர் பேரழகுடையவர்களாகச் சொல்லப்படுவர். “அச்சாரணர்” என்பதில் அகரம் பண்டறி சுட்டு. கண்ணி - 43 - 47: எச்சார்வும் - எவ்விடத்திலும். சல்லரி முதல் முருடு ஈறாகச் சொல்லப்பட்டவை வாத்திய வகைகள். அவற்றுட் பெரும்பாலான தத்தம் ஓசை காரணமாகப் பெயர் பெற்றன. கல்லவடம் - இரத்தின மாலை. இதனை மொந்தைக்கு
|