பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை200

48.மங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும்
கிங்கரரும் எங்குங் கிலுகிலுப்பத் - தங்கிய
49.ஆறாம் இருதுவும், யோகும், அருந்தவமும்
மாறாத முத்திரையும், மந்திரமும், - ஈறார்ந்த
50.காலங்கள் மூன்றும் கணமும் குணங்களும்
வால கிலியரும் வந்தீண்டி - மேலை
51.இமையோர் பெருமானே போற்றி! எழில்சேர்
உமையாள் மணவாளா போற்றி - எமைஆளும்

அடையாக்குக. இலயத்தட்டு தாள அறுதி தோன்றத் தட்டுதல். சங்கு, அத்தட்டினைக் கடந்து ஒலித்தலால், “தட்டு அழி சங்கம்” என்றார். ‘சலஞ்சலம்’ என்பதும் ஒருவகைச் சங்கே. தாளம் - பிரம்ம தாளம். கட்டு அழியாப் பேரி - வார்க் கட்டுத் தளராத பேரிகை. கர தாளம் - கைத் தாளம். இது சிறிய அளவினதும், குவிந்த வடிவினதுமாய்ச் சிறிய அளவில் ஒலிப்பது. மகளிர் தனங்கட்கு உவமையாகச் சொல்லப்படும் தாளம் இதுவே. முன்னர்ச் சொல்லியது பெரிய அளவினதாய்ப் பேரோசையைத் தகுவது. இயம்ப - ஒலிக்க.

கண்ணி - 47, 48: மங்கலம் பாடுவார்; சூதரும், மாகதரும். இவர்கள் முறையே திருவோலகத்தில் நின்றேத் துவாரும், இருந்தேத்துவாரும் ஆவர். மல்லர் - மெய்க்காப் பாளர். கிங்கரர் - தூதுவர், இவரெல்லாம் சிவ கணத்தவராவர். கிலுகிலுத்தல் - முணுமுணுத்தலும், அதட்டுதலும்,

கண்ணி - 49, 50: இருது - ருது. இது தமிழில் ‘பெரும் பொழுது’ எனப்படும். அவற்றைக் கார் முதலாக (ஆவணி முதலாக) வைத்து எண்ணுதல் தமிழ் மரபு. வசந்தம் முதலாக வைத்து எண்ணுதல் வடநூல் வழக்கு. (வசந்தம், கிரீஷ்மம், வர்ஷம், சரத், ஹேமந்தம், சிசிரம்.) வசந்தம் முதலிய ஆறும் சித்திரை முதல் இரண்டிரண்டு மாதங்களையுடையன. பெரும் பொழுது கூறியதனானே சிறுபொழுதுகளும் கொள்ளப்படும். யோகு - யோகம். முத்திரை - சின்முத்திரை முதலிய கைக்குறிகள். கணம் (க்ஷணம்) - நொடி. இதனைக் கூறவே உபலக்கணத்தால் துடி, இலவம் முதலிய பிற நுட்பங்காலங்களும் கொள்ளப்படும். இருது முதலாக இதுகாறும் கூறப்பட்டன அவற்றின் அதி தேவர்களையாம். வால்கிலியர் - பிரமனது மானச புத்திரனாகிய ‘கிருது’ என்பவனுக்கும், ‘கிரியை’ என்பவளுக்கும் பிறந்த அறுபதினாயிரவர் இவர் அங்குட்ட அளவினராய், வானப்பிரத்தர்களாய்ச் சிவநெறியில் நிற்பவர்கள் என்பர். ஈண்டி - நெருங்கி.

கண்ணி - 51 - 55: தேவர் பலரும் பெருமான் புறப்பாட்டின் பொழுது அவனைப் பலவகையால் போற்றி செய்து ஆரவாரித்துப் பூமழையைப் பொழிந்தமை கூறப்பட்டது.