| 52. | தீயாடி போற்றி! சிவனே அடிபோற்றி! ஈசனே, எந்தாய், இறைபோற்றி! - தூயசீர்ச் |
| 53. | சங்கரனே போற்றி! சடாமகுடத் தாய்போற்றி! பொங்கரவா பொன்னங் கழல்போற்றி! - அங்கொருநாள் |
| 54. | ஆய விழுப்போர் அருச்சுனன் ஆற்றற்குப் பாசுபதம் ஈந்த பதம்போற்றி! - தூய |
| 55. | மலைமேலாய் போற்றி! மயானத்தாய் வானோர் தலைமேலாய் போற்றிதாள் போற்றி! - நிலைபோற்றி |
| 56. | போற்றிஎனப் பூமாரி பெய்து புலன்கலங்க நாற்றிசையும் எங்கும் நலம்பெருக, - ஏற்றுக் |
| 57. | கொடியும் பதாகையும் கொற்றக் குடையும் வடிவுடைய தொங்கலுஞ் சூழக் - கடிகமழும் |
| 58. | பூமாண் கருங்குழலார் உள்ளம் புதிதுண்பான் வாமான ஈசன் வரும்போழ்திற் - சேமேலே |
கண்ணி - 53: பொங்கு அரவா - சீற்றம் மிக்க பாம்பினை அணிந்தவனே. கண்ணி - 54: ஆற்றல் - தவ வலிமை. பதம் - திருவடி திருவருளைத் திருவடியாகக் கூறுதல் வழக்கு. கண்ணி - 54, 55: தூய மலை - வெண்மலை; கயிலாயம், மயானம், ஊழிமுடிந்த இடம். நிலை நித்தியத்துவம். கண்ணி - 56: “நாற்றிசையும் எங்கும்” என்றது, ‘எந்தப் பக்கத்திலும், எந்த இடத்திலும்’ என்றபடி. கண்ணி - 56, 57: ஏற்றுக் கொடி - இடபக் கொடி. இது சிவபெருமானுக்கு உரியது. பதாகை - கொடி. பொதுப்படக் கூறியதனால் உடன் வந்த மால், அயன், இந்திரன் மற்றும் முருகன் முதலியோரது கொடிகளைக் கொள்க. வடிவு - அழகு. தொங்கல் - மாலை. கடி - நறுமணம். கண்ணி - 58: பூ மாண் கருங் குழலார் - பூவை யணிந்த, மாட்சிமைப்பட்ட, கரிய கூந்தலையுடைய மகளிர் ‘புதிதாக உண்ண’ என ஆக்கம் வருவித்துரைக்க. உண்ணல் - கவர்தல். ‘புதிதாக’ என்றது இதுகாறும் இது நிகழாமையைக் குறித்தது. எனவே, ‘மகளிர் உள்ளங்கள் எளிதில் உண்ணப்படும்’ என்பது குறித்தாயிற்று. ‘வாம
|