மகளிர் குழாங்கள் | 59. | வாமான ஈசன் மறுவில்சீர் வானவர்தம் கோமான் படைமுழக்கம் கேட்டலுமே - தூமாண்பில்) |
| 60. | வானநீர் தாங்கி மறைஓம்பி வான்பிறையோ(டு) ஊனமில் சூலம் உடையவாய் - ஈனமிலா |
| 61. | வெள்ளை யணிதலால் வேழத் துரிபோர்த்த வள்ளலே போலும் வடிவுடைய - ஒள்ளிய |
| 62. | மாட நடுவில் மலர்ஆர் அமளியே கூடிய போர்க்கள மாக்குறித்துக் - கேடில் |
மான’ என்பது “வாமான” எனக் குறைந்து நின்றது. வாமம் - அழகு. மானம் - பெருமை. கண்ணி - 59: மறு இல் சீர் வானவர் - குற்றம் இல்லாத புகழை யுடைய தேவர். கண்ணி - 60 - 62: மாளிகைக்கும், சிவபெருமானுக்கும் சிலேடை. வான நீர் - ஆகாய கங்கை. மறை - சிவபெருமான் வேதங்களை அழியாமல் காக்கின்றான். மாளிகைகள் தம்முள் நிகழும் இரகசியங்களை வெளித் தோன்றாமல் காக்கின்றன. இருவரும் முடியில் பிறையை அணிகின்றனர். சூலம் - சிவபெருமான் சூலம் ஏந்தியுள்ளான். மாளிகைகள் (சூல் ஆம்) கருக்கொண்ட மேகங்களைத் தாங்குகின்றன. அம் - நீர். அஃது ஆகுபெயராய் மேகத்தைக் குறித்தது. ஈனம் - தாழ்வு. வெள்ளை - திருநீறு; சுதை வேழத்து உரி போர்த்தவள்ளல் சிவபெருமான். வடிவு - தோற்றம். ஒள்ளிய - ஒளி பொருந்திய மாடம் - மேல் மாடம். அமளி - படுக்கை. அக்காலத்தில் அரசர்கள் போர் தொடங்கும் பொழுது. நாளை ‘இன்ன நாள்’ என்றும், களத்தை, ‘இன்ன இடம்’ முன்பே குறித்துக் கொள்வர். அவற்றுள் இடம் குறித்தலை, ‘களம் குறித்தல்’ எனக் கூறும் வழக்கம் பற்றி, “போர்க்களமாக் குறித்து” என்றார். போர், ஆடவரோடு ஆடும் கலவிப் போர். சிவபெருமான் உலாப் போதுங்கால் பல திறக் குழாங்கள் குழுமி நிற்குமாயினும், உலாவால் மகளிர் குழாம் பட்ட பாட்டினை எடுத்துக் கூறுவதே இப்பிரபந்தம் ஆதலின், அவை பற்றியே குறிக்கின்றார்.
|