| 80. | பாடவம் தோன்ற முடியாள் இளவேய்த்தோள் ஆடவர் தம்மை அயர்வுசெய்யாள்; - நாடோறும் |
| 81. | ஒன்றுரைத் தொன்றுன்னி ஒன்றுசெய் தொன்றின்கண் சென்ற மனத்தினளாஞ்சேயிழையாள் - நன்றாகத் |
| 82. | தாலி கழுத்தணிந்து சந்தனத்தால் மெய்பூசி நீல அறுவை விரித்தெடுத்துக் கோலஞ்சேர் |
இருநோக்கு இவள்உண்கண் உள்ளது; ஒருநோக்கு நோய்நோக்(கு); ஒன்று அந்நோய் மருந்து.1 என்னும் குறளில், “நோய் நோக்கு” என்பதற்குப் பரிமேலழகர் உரைத்த உரையை நோக்குக. நோய் நோக்கம் - நோயை உண்டாக்கும் நோக்கம். “நோக்கமாக நோக்காள்” என ஆக்கம் வருவித்துரைக்க. வாக்கின் - சொல்லால். சொல்லால் பிறர் மனத்து வஞ்சித்தலாவது, ஆடவன் ஒருவன் தேர், அல்லது குதிரை மேல் செல்லுதலைக் கண்ட பொழுது அவனைக் காதலித்த காதல் காரணமாகக் கண் கலுழ்ந்து நின்றாளைத் தாயர் நோக்கி, ‘ஏடி, என்ன கண் கலுழ்கின்றாய்’ என்று உருத்து வினாயபொழுது ‘அன்னாய், ஒன்றும் இல்லை; தேர், அல்லது குதிரை சென்ற வேகத்தால் எழுந்த தூசு கண்களில் வீழ்ந்து விட்டது. கண்கள் கலுழ்கின்றன’ என விடையிறுக்க, அவர்கள் உள்ளத்தில், ‘இவள் நம்மை வஞ்சிக்கின்றாள்’ என்னும் எண்ணம் தோன்றச் செய்தல். பிறர் மனத்தும் வஞ்சியாள் என்னும் உம்மை, ‘தன் மனத்தும் வஞ்சனையிலள்’ என இறந்தது தழுவிற்று. கண்ணி - 79, 80: ‘குழலை முடியாள்’ என்க. முடியாமைக்குக் காரணம் அவை முடிக்க வாராமை. பேதைப் பருவத்தாளை, ‘முடிகூடாதவள்’ என்றல் வழக்கு. பாடலம் - ஆரவாரம்; பகட்டு. இள வேய் - முற்றாத, முளையாகிய மூங்கில். தோள்கள் அன்ன சிறிய ஆகலின் ஆடவர்க்கு விருப்பம் தாரா ஆயின. கண்ணி - 80, 81: சொல்வது ஒன்று, நினைப்பது ஒன்று, அடுத்து விரும்புவது ஒன்று; இவ்வாறு நிலையாக ஒன்றிலும் நில்லாமை பேதைப் பருவத்து இயல்பு என்றபடி. கண்ணி - 82: தாலி - நாபி அளவும் தொங்கவிடும் அணிகலன்.அறுவை - துணி. பேதைப் பருவத்தாள் தெருப் புழுதியில்
1. திருக்குறள் - 1091.
|