பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை208

83.பந்தரில் பாவைகொண்(டு) ஆடுமிப் பாவைக்குத்
தந்தையார் என்றொருத்தி தான்வினவ - அந்தமில்சீர்
84.ஈசன் எரியாடி என்ன அவனைஓர்
காய்சின மால்விடைமேல் கண்ணுற்றுத் - தாய்சொல்
85.

இக்கணக்கு நோக்காள் இவள்போல்வாள் காமநூல்
நற்கணக்கின் மேற்சிறிதே நாட்செய்தாள் - பொற்புடைய


விளையாடுதல் பற்றி நீலத் துணியை உடுத்து விடுப்பர். ‘அதுவும் ஒரு சுற்றாகவே இருக்கும்’ என்றற்கு, “விரித்துடுத்து” என்றார். கோலம் - அழகு.

கண்ணி - 83, 84: “பாவை கொண்டு” என்பதை, ‘பாவை கொள்ள’ எனத் திரிக்க. கொள்ளுதல், கொண்டு விளையாடுதல். ஒருத்தி, ஊராருள் ஒருத்தி. தான். அசை, வினவ - குறும்பாகக் கேட்க. பேதைதன் தாய். ‘இப்பாவைக்குத் தந்தை சிவபெருமான்தான்’ அஃதாவது, ‘கடவுள்தான்’ என்று அவளும் குறும்பாக விடையிறுக்க, அந்தச் சிவபெருமான் அப்பொழுது; தற்செயலாய் ஒரு பெரிய இடப வாகனத்தின் மேல் அங்கு வந்தான்.

காய் சினம், விடைக்கு இன அடை.

பேதைப் பருவத்தாள் அவனைக் கண்ணாரக் கண்டாள்.

கண்ணி - 84, 85: ஆயினும் தாய் சொல்லிய சொல்லின் முறைமையை முழுமையாக அறிதல் இவளைப்போன்ற பேதைப் பருவப் பெண்களுக்கு இயலாது. அஃதாவது, இல்லத்தில் தன் தாய் தன்னையும், மற்றும் குழவிகளையும் சீராட்டிப் பாராட்டுதலைப் பார்த்துத் தானும் ஒருபாவையைத் தன்னுடைய மகவாகக் கொண்டு அவ்வாறு சீராட்டி விளையாடுகின்ற பேதைப்பெண், ‘ஒரு மகவிற்குத் தாயாகினாள் என்றால், அதற்கு முன்னே அதற்குத் தங்கை யாகக் கூடிய ஒருவனை மணந்திருக்க வேண்டுமன்றோ’ என்னும் ஆழ்ந்த பொருளில் அயலாள் ஒருத்தி, ‘இப்பாவைக்குத் தந்தை யார்’ என்று குறும்பாகக் கேட்டாள். இந்தப் பேதைப் பெண்ணுக்கு இதற்குள் மணவாளன் ஏது’ என்பது படத்தாய், ‘கடவுள்தான் இப்பாவைக்குத் தந்தை’ எனக் குறும்பாக விடையிறுத்தாள். இந்த நுட்பங்களைப் பேதை அறியமாட்டாள். ஆயினும் தாய் சொன்னபடி தெய்வச் செயலாகச் சிவபெருமான் அங்கு உலாப்போந்தான். பேதை மற்றவர்போலத் தானும் அவனைக் கண்டாள்.

‘இவள் போல்வாள் நோக்காள்’ என மாறிக் கூட்டி, ‘ஆயினும்’ என்பது வருவிக்க.