பக்கம் எண் :

209திருக்கைலாய ஞானஉலா

2. பெதும்பை

86.பேரொளிசேர் காட்சிப் பெதும்பைப் பிராயத்தாள்
காரொளிசேர் மஞ்ஞைக் கவினியலாள் - சீரொளிய
87.தாமரை ஒன்றின் இரண்டு குழைஇரண்டு
காமருவு கெண்டை,ஓர் செந்தொண்டை, - தூமருவு
88.முத்தம் முரிவெஞ் சிலை,சுட்டி, செம்பவளம்
வைத்தது போலும் மதிமுகத்தாள் - ஒத்தமைந்த

‘தன் பாவைக்குத் தந்தை வேண்டும்’ என்றும் ‘அந்தத் தந்தை சிவபெருமான்தான்’ என்று தாய் கூறிவிட்டாள் - என்றும் இந்த முறைமைகளுக்காகப் பேதை சிவபெருமானை விரும்பவில்லை. (அந்த முறைமை யெல்லாம் அறியும் பருவம் அன்று அவள் பருவம்.) ஆயினும் தன்னியல்பால் தானே சிவபெருமானைக் காதலிக்கின்ற முறைமையில் காதல் செய்வதற்கு நல்ல நேரத்தில் தொடக்கம் செய்தாள்.

“கணக்கு” இரண்டில் முன்னது முறைமை; பின்னது நூல். நாட் செய்தல் - நாள் கொள்ளுதல்; தொடங்குதல். பேதையின் காதல் நல்ல முறையில் நல்ல நேரத்தில் தொடங்கியது என்க. இதற்குமுன் இவள் ‘காதல்’ என்பதையே அறியாள் என்பதைக் குறித்தபடி. காதல் என்பதையே அறியாதவளும் காதல் தோன்றப் பெற்றாள்; சிவபெருமானது திருவுலா அத்தன்மைத் தாய் இருந்தது. அவ்வுலாப் ‘பத்தி’ என்பதையே அறியாதவர்க்கும் பத்தியைத் தோற்றுவிக்கும் தன்மையது’ என்பது இதன் உள்ளுறை.

கண்ணி - 86: எட்டு முதல் பதினோர் ஆண்டு முடியப் பெதும்பைப் பருவம். பேரொளி - மிக்க அழகு. சேர்தல் - ஒருகாலைக்கொருகால் மிகுதல். கார் ஒளி சேர் மஞ்சைக் கவின் இயலாள் - நீல ஒளிவளரப் பெறுகின்ற மயிலைப் போலும் அழகு வளர்தலை யுடையவள்.

கண்ணி - 87, 88: ஒரு தாமரை மலரிலே இருதளிர், இரு அழகிய கெண்டைமீன், ஒரு சிவந்த கொவ்வைக் கனி, முத்துக்கள், வளைந்த வில், ‘சுட்டி’ என்னும் அணிகலம், சிவந்த பவளம் இவைகளை ஒருங்கு வைத்தது போலும் நன்கு மதிக்கத் தக்க முகத்தையுடையவள்.

தளிர் காது; கெண்டை கண்கள்; கொவ்வைக் கனி இதழ்; முத்துக்கள் பற்கள்; வில் புருவம்; இவையெல்லாம் உருவக வகையால்