பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை210

89.கங்கணம் சேர்ந்திலங்கு கையாள், கதிர்மணியின்
கிங்கிணி சேர்ந்த திருந்தடியாள் - ஒண்கேழ்நல்

 

90.அந்துகில் சூழ்ந்தசைந்த அல்குலாள், ஆய்பொதியில்
சந்தனம் தோய்ந்த தடந்தோளாள் - வந்து

 

91.திடரிட்ட திண்வரைக்கண் செய்த முலையாள்
கடல்பட்ட இன்னமுதம் அன்னாள், - மடல்பட்ட

 

92.

மாலை வளாய குழலாள், மணம்நாறு
சோலை இளங்கிளிபோல் தூமொழியாள், - சாலவும்


கூறப்பட்டன. சுட்டியும், பவளமும் உவமையாற் கூறப்பட்டன, பவள படமும் அணிகலமாகக் கொள்க.

கண்ணி - 88, 89: ஒத்து அமைந்த - கைக்குப் பொருந்தி அமைந்த. கங்கணம் - காப்பு. பெதும்பை ஆதலின் வளை அணியாது, காப்பு அணிந்தாள்.

கதிர் மணி - ஒளி பொருந்திய இரத்தினம். கிங்கிணி - சதங்கை. இதுவும் பெதும்பைக்கு உரியது.

கண்ணி - 89, 90: ஒண் கேழ் - ஒளி பொருந்திய நிறம். மேகலை யணியாது, துகில் மாத்திரமே உடுத்தாள். அசைதல் - இறுகக் கட்டப்படுதல். பேதை இவ்வாறு கட்டுதல் இல்லை.

ஆய் பொதியில் - தமிழை ஆராய்ந்த இடமாகிய பொதி யில் மலை. ‘அதன்கண் உண்டான சந்தன மரத்தின் தேய்வை’ என்க. சந்தனத்தைத் தொய்யலாக எழுதாமல் வாளா பூசிக் கொண்டாள்.

கண்ணி - 90, 91: தம் இடத்தை விட்டு வந்து இங்கு எழுவதற்கு ஒளிந்துள்ள மலைகள் தாம் எழுவதற்குரிய காலத்தை எதிர் நோக்கிச் சிறிதே எட்டிப் பார்ப்பது போலும் கொங்கைகளை யுடையவள்.

திடர் இடுதல் - மண்ணில் மறைந்திருத்தல். ‘அதுபோன்ற நிலையினை யுடைய மலைகள்’ என்க. கண் செய்தல் - எட்டிப் பார்த்தல். வழி கோலுதலும் ஆம்.

கடல் பட்ட இன்னமுதம் - பாற்கடலில் உருவாகிக் காணப்பட்ட இனிய அமுதம்.

கண்ணி - 91, 92: மடல் பட்ட - பூவின் இதழ்கள் பொருந்திய.மாலையால் சுற்றிக் கட்டப்பட்ட கூந்தலை யுடையவள்.

இளங் கிளி - நன்கு முதிராத கிளி. தூமொழி - வஞ்சனை கலவாத சொல்.