27. | அந்தணனைத் தஞ்சம்என்(று) ஆட்பட்டார் ஆழாமே வந்தணைந்து காத்தளிக்கும் வல்லாளன் - கொந்தணைந்த பொன்கண்டால் பூணாதே கோள்அரவம் பூண்டானே என்கண்டாய், நெஞ்சே, இனி. | | 4 |
28. | இனிவார் சடையினில் கங்கையென் பாளைஅங் கத்திருந்த கனிவாய் மலைமங்கை காணில்என் செய்திகை யிற்சிலையால் முனிவார் திரிபுரம் மூன்றும்வெந் தன்றுசெந் தீயின்மூழ்கத் தனிவார் கணையொன்றி னால்மிகக் கோத்தஎம் சங்கரனே. | | 5 |
27. அ. சொ. பொ.: ‘முன்னைப் பாடலிற் கூறிய அவ்வந்தணன் அத்தன்மையன் ஆதலின், நெஞ்சே, இனி யேனும் அவனது பெருமையைச் சொல்லி அவனைப் புகழ்’ என்பது இப்பாட்டின் திரண்ட பொருள். இதன் முதல் இரண்டடிகள் முன்னைப் பாட்டிற் கூறியவற்றை மீட்டும் அநு வதித்துக் கூறியன. ‘துயரில் ஆழாமே’ எனச் சொல்லெச்சம் வருவித்துரைக்க. கொந்து - கொத்து; என்றது தீக்கொழுந்தை. “இணர் எரி”1 என்றல் வழக்கு. ‘கொந்தில் அணைந்த பொன்’ என்க. நெருப்பில் காய்ச்சி ஓட விட்ட பொன், மாசு நீங்கி ஒளி மிக்கதாகும். பொன் ஆகு பெயரால், அதனால் ஆகிய அணிகலங்களைக் குறித்தது. கோள் - கொடுமை. “இனி” என்பதன் பின், ‘ஆயினும்’ என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது. “அந்தணன்” என்றது, ‘அவ்வந்தணன்’ என்னும் பொருட்டாகலின் முதற்கண், ‘அந்தணன்’ என்றே வைத்து, பின், ‘அவனை என்’ எனக் கூட்டி முடிக்க. கண்டாய், முன்னிலையசை. ‘கோள் அரவம் பூண்டமையே அவன் ‘தஞ்சம்’ என்று அடைந்தாரை ஆழாமற் காத்தலைத் தெரிவிக்கும்’ என்பது குறிப்பு. ‘அறியாது கழிந்த நாள்கள் போக, அறிந்த பின்ன ராயினும் தாழாது சிவனைத் துதித்தல் வேண்டும்’ என்பதாம். 28. அ. சொ. பொ.: முனிவார் - கோபிப்பவர்; திரிபுரம், (வானத்தில்) திரிந்தபுரம், என வினைத்தொகை. பகைவர், “வெந்து மூழ்க” என்பதனை, ‘மூழ்கி வேவ’ என மாற்றிவைத் துரைக்க. சிலை - வில். “சிலையால்” என்றது, ‘விற் போரினால்’ என்றபடி. வார் கணை - நீண்ட அம்பு. “கணை ஒன்றினால்” என்பதை, ‘கணை ஒன்றினை’ எனத் திரித்துக் கொள்க. அங்கம் - உடம்பு. “காணின் என் செய்தி” என்றது, ‘நாணித் தலை குனிவை போலும்’ என்றபடி. எனினும், ‘உயிர்களின் நன்மைக் காகவன்றிப் பிறிதொன்றையும்
1 திருக்குறள் - 308
|