29. | சங்கரனைத் தாழ்ந்த சடையானை அச்சடைமேற் பொங்கரவம் வைத்துகந்த புண்ணியனை - அங்கொருநாள் ஆவாஎன்று ஆழாமைக் காப்பானை எப்பொழுதும் ஓவாது நெஞ்சே உரை. | | 6 |
30. | உரைக்கப் படுவதும் ஒன்றுண்டு கேட்கின்செவ் வான்தொடைமேல் இரைக்கின்ற பாம்பினை என்றுந் தொடேல்இழிந் தோட்டத்தெங்கும் திரைக்கின்ற கங்கையுந் தேன்நின்ற கொன்றையுஞ் செஞ்சடைமேல் விரைக்கின்ற வன்னியுஞ் சென்னித் தலைவைத்த வேதியனே. | | 7 |
செய்யாதவன் நீ’ என்பதை அவன் அறிவான் ஆகலின், ‘இதுவும் ஒரு நன்மைக்கே’ என்பது உணர்ந்து அவனும் முனியப் போவதில்லை; நீயும் நாணுதற்குக் காரணம் இல்லை’ என்பது இப்பாட்டின் உள்ளுறைச் சிறப்பு இதனை வட நூலார் ‘நிந்தாத் துதி’ என்றும், அதனைத் தமிழில் பெயர்த்துக் கூறுவார், ‘பழிப்பது போலப் புகழ்தல்’1 என்றும் கூறுவர். பின்னும் இவ்வாறு வருவனவற்றை உணர்ந்து கொள்க. 29. அ. சொ. பொ.: சங்கரன் - இன்பத்தைச் செய்பவன். தாழ்ந்த சடை - நீண்டு தொங்குகின்ற சடை. பொங்கு - சினம் மிகுகின்ற “அங்கொருநாள்” என்றது, கூற்றுவன் வரும் நாளினை. ஆ! ஆ!, இரக்குறிப்பு இடைச்சொல். என்று - என்று இரங்கி. “ஆழாமைக் காப்பான்” என்பது மேலேயும் வந்தது.2 ஓவாது - ஓழியாமல், உரை - சொல்லு; துதி. எப்போழுதும் ஓவாது துதித்தால்தான் காப்பான்’ என்பது குறிப்பு. ‘அன்று துதித்தல் இயலாது’ என்பதாம் “சாங்காலம் சங்கரா! சங்கரா என வருமோ” என்பது பழமொழி. 30. அ. சொ. பொ.: உம்மை, சிறப்பு. செவ்வான் தொடை - செவ்விய உயர்ந்த மலர்மாலை; கொன்றை மாலை. இரைக்கின்ற - சீறிக்கொண்டிருக்கின்ற. தொடேல் - தொடாதே. என்றது, அது, ‘பிறைச் சந்திரன் வளரும்’ என்று பசியோடு காத்திருக்கின்றது; அதனால் சினம் மிகுந்து கடித்துவிடலாம் - என்றபடி. இதனால், ‘தம்முட் பகையுடையனவாகிய பாம்பையும், மதியையும் ஓரிடத்தில் சேர்த்து வைத்திருக்கின்றா யல்லையோ’ எனக் குறிப்பாற் புகழ்ந்தவாறு. இழிந்து ஓட்டத்து - கீழே வீழ்ந்து ஓடும்பொழுது. தண்டியலங்காரம் - சூ - 62 உரை. பாட்டு - 4
|