31. | வேதியனை வேதப் பொருளானை வேதத்துக்(கு) ஆதியனை ஆதிரைநன் னாளானைச் - சோதிப்பான் வல்லேன மாய்ப்புக்கு மாலவனும் மாட்டாது கில்லேன மாஎன்றான் கீழ். | | 8 |
32. | கீழா யினதுன்ப வெள்ளக் கடல்தள்ளி உள்ளுறப்போய் வீழா திருந்தின்பம் வேண்டுமென் பீர்,விர வார்புரங்கள் பாழா யிடக்கண்ட கண்டன்எண் தோளன்பைம் பொற்கழலே தாழா திறைஞ்சிப் பணிந்துபன் னாளுந் தலைநின்மினே. | | 9 |
33. | தலையாய ஐந்தினையுஞ் சாதித்துத் தாழ்ந்து தலையா யினவுணர்ந்தோர் காண்பர் - தலையாய |
திரைக்கின்ற - அலை வீசுகின்ற. விரைக்கின்ற - ‘வாசனை வீசுகின்ற கொன்றை’ என இயைக்க. வன்னி - வன்னியிலை. தலை, ஏழாம் வேற்றுமையுருபு. வேதியன் - வேதம் ஓதுபவன். ‘சிவன் சாம வேதத்தை ஓதுபவன்’ என்பர். ஓதுதல் பிறர் அறியவாம். 31. அ. சொ. பொ.: ‘வேதத்தை ஓதுபவனும், வேதத்திற்குப் பொருளாய் உள்ளவனும், வேதத்தைச் செய்தவனும் ஆகிய ஆதிரை நன்னாளானை’ என்க. ‘சோதித்தற்கு மாலவனும் வல் ஏனமாய்க் கீழ்ப் புக்கு, மாட்டாது, - கில்லேன் அமா - என்றான்’ என வினை முடிக்க. சோதித்தல் - அளந்தறிதல். ஏனம் - பன்றி. கில்லேன் - மாட்டேன். ‘அம்மா’ என்னும் வியப்பிடைச்சொல் இடைக் குறைந்துநின்றது. “மாலவனும் - கில்லேன் - என்றான்” என்றதனால், ‘ஏனையோர் மாட்டாமை சொல்ல வேண்டுவதோ’ என்பது கருத்து. 32. அ. சொ. பொ.: ‘இழிந்த துன்பமாகிய பெரிய கடலிலே தள்ளப்பட்டு, அதன் உள்ளே அழுந்தாமல் வேறிருந்து நுகர் கின்ற இன்பம் வேண்டும்’ என்று விரும்புகின்றவர்களே - என்று எடுத்து, ‘தலைநின்மின்’ என முடிக்க. நின்றால், ‘அத்தகைய இன்பம் கிடைக்கும்’ என்பது குறிப்பெச்சம். தள்ளு தலுக்கு ‘வினையால்’ என்னும் வினைமுதல் வருவிக்க. ‘இருந்து நுகர்கின்ற’ என ஒரு சொல் வருவிக்க. ‘துன்பக் கலப்பு இல்லாத இன்பம்’ என்றபடி அது வீட்டின்பமேயாம். விரவார் - கலவாதவர்; பகைவர். “கண்ட” என்றது ‘செய்த’ என்றபடி. கண்டன் - வன்கண்மையுடையவன். ‘வன்கண்மை குற்றத்தின் மேலது’ என்பது கருத்து. தாழாது - தாமதியாமல் இறைஞ்சுதல் - தலை வணங்குதல். பணிதல் - அடியில் வீழ்தல். தலை, இடைச் சொல்லாதலின், ‘தலைநின்மின்’ என்றது ஒருசொல் நீர்மைத்து ‘அச்செயலிலே நின்மின்’ என்றதாம். 33. அ. சொ. பொ.: தலையாய ஐந்து - மந்திரங்களுள் தலையாய ஐந்தெழுத்து, சாதித்தல் - கடை போகப் பற்றி முயலுதல்.
|