| அண்டத்தான் ஆதிரையான் ஆலாலம் உண்டிருண்ட கண்டத்தான் செம்பொற் கழல். | | 10 |
34. | கழற்கொண்ட சேவடி காணலுற் றார்தம்மைப் பேணலுற்றார் நிழற்கண்ட போழ்தத்தும் நில்லா வினைநிகர் ஏதுமின்றித் தழற்கொண்ட சோதிச் செம் மேனியெம் மானைக்கைம் மாமலர்தூய்த் தொழக்கண்டு நிற்கிற்கு மோதுன்னி நம்அடுந்தொல்வினையே. | | 11 |
35. | தொல்லை வினைவந்து சூழாமுன் தாழாமே ஒல்லை வணங்கி உமையென்னும் - மெல்லியலோர் கூற்றானைக் கூற்றுருவங் காய்ந்தானை வாய்ந்திலங்கு நீற்றானை நெஞ்சே நினை. | | 12 |
அஃது இங்குக் கணித்தலைக் குறித்தது. தாழ்தல் - வணங்குதல். தலையாயின - மேலான நூல்கள் “அருள் நூலும், ஆரணமும், அல்லாதும், அஞ்சின் - பொருள் நூல்களே”1 ஆதலின் அவற்றை உணர்ந்தோர் திருவைந்தெழுத்தையே பற்றிச் சாதிப்பர் - என்றபடி. தலையாய அண்டம் - சிவலோகம். ‘தலையாயின உணர்ந்தோர் சாதித்துத் தாழ்ந்து கழல் காண்பர்’ என வினை முடிக்க, இதனுள் சொற்பொருள் பின்வருநிலையணி வந்தது. 34. அ. சொ. பொ.: ‘நிகர் ஏதுமின்றித் தழற்கொண்ட சோதிச் செம்மேனி எம்மான்’ - சிவன். அவன் தனக்குவமை யில்லாதவன்; நெருப்பினிடத்துள்ள ஒளிபோலும், சிவந்த மேனியை உடையவன். ‘அவனது கழலழணிந்த, சிவந்த பாதங்களைக் கண்டவர்களை வணங்குபவர்களது நிழலைக் கண்டாலே வினைகள் ஓடிவிடும் என்றால், அப்பெருமானை நாம் நமது கைகளால் மலர் தூவித் தொழுவதைப் பார்த்த பிறகும் நம்மைவருத்துகின்ற நமது பழைய வினைகள் நம்மை நெருங்கி நிற்குமோ’ என்க. ‘சிவன் அடியார்களையும், அடியார்க்கு அடியார்களையும் கண்டால் வினைகள் நிற்க மாட்டாது ஓடிவிடும்” என்றபடி. ‘கழல், நிழல், தழல்’ என்பவற்றின் ஈறு திரிந்தது செய்யுள் நோக்கி. உம்மை இரண்டனுள் முன்னது இழிவு சிறப்பு; பின்னது உயர்வு சிறப்பு. “போழ்தத்து” என்பதில் அத்து, வேண்டாவழிச் சாரியை. ‘வினை துன்னி நிற்குமோ’ என மாறிக் கூட்டுக. 35. அ. சொ. பொ.: தொல்லை - பழமை. தாழாமே - தாமதியாமலே. ஒல்லை - விரைவாக. கூற்று - யமன். காய்தல், உதைத்தலாகிய தன் காரியம் தோற்றிநின்றது. வாய்ந்து -
1. திருவருட்பயன் - 81.
|