பக்கம் எண் :

25திருஇரட்டை மணிமாலை

36.நினையா தொழிதிகண் டாய்நெஞ்ச மேஇங்கொர் தஞ்சமென்று
மனையா ளையும்மக்கள் தம்மையுந் தேறிஓர் ஆறுபுக்கு
நனையாச் சடைமுடி நம்பன்,நந் தாதைநொந் தாதசெந்தீ
அனையான் அமரர் பிரான்அண்ட வாணன் அடித்தலமே. 

13

37.அடித்தலத்தின் அன்றரக்கன் ஐந்நான்கு தோளும்
முடித்தலமும் நீமுரித்த வாறென் - முடித்தலத்தின்
ஆறாடி ஆறா அனலாடி அவ்வனலின்
நீறாடி நெய்யாடி நீ. 

14


(திருமேனியில்) பொருந்தி, “வணங்கி நினை” என்பதை “நினைந்து வணங்கு” என முன் பின்னாக நிறுத்தி, விகுதி பிரித்துக் கூட்டியுரைக்க.

36. அ. சொ. பொ.: ‘நெஞ்சமே, மனையாளையும் மக்கள் தம்மையும், ‘இங்கு ஓர் தஞ்சம்’ என்று தேறி, அண்ட வாணன் அடித்தலம் நினையாது ஒழிதியோ’ என இயைத்துக்கொள்க. மனையாளும், மக்களும் அம்மையார்க்கு இல்லையாதலின், ‘அவர்களைத் தேறி’ என்றது. ‘அவர்களைத் தேறும் பிறரது மனங்களைப்போலவே நீயும் ஆகி’ என்றது என்க. “சிவன்தாள் சிந்தியாப் பேதைமார் போல நீ வெள்கினாயே.... நெஞ்சமே”1 என அருளிச்செய்தார் ஞானசம்பந்தரும். ‘ஒழிதியோ’ என்பதில் வினாப் பொருட்டாய ஒகாரம் தொகுத்தலாயிற்று. “கடையவ னேனைக் கருணையினாற்கலந் தாண்டு கொண்ட - விடையவனே விட்டிடுதி கண்டாய்”2 என்பதிற்போல. அவ்வோகாரத்தால், ‘அங்ஙனம் செய்தியாயின் கெடுவை’ என்னும் குறிப்புப் போந்தது. கண்டாய், முன்னிலையசை. இங்கு - இவ்வுலகில். தஞ்சம் - புகலிடம். தேறுதல் - தெளிதல். ஓர் ஆறு, கங்கை. ‘கங்கையாறு புக்கது; ஆயினும் சடை நனையவில்லை’ என்றது சடைக்கு அதுபோதவில்லை என்றபடி நொந்தாத - மிகுக்க வேண்டாத. ‘மிக எரிகின்ற’ என்றபடி அனையான் - போன்றவன். அண்ட வாணன் - சிவலோ கத்தில் வாழ்பவன். அடித்தலம் - திருவடியாகிய புகலிடம். ‘புகலிடம் ஆகாததை, ஆகும் என்று மயங்கிப் புகலிடம் ஆவதை விட்டொழியாதே’ என அறிவுறுத்தவாறு.

37. அ. சொ. பொ.: ‘அடித்தலத்தின் நெரித்தவாறு’ என இயையும். இன், ஐந்தாம் உருபு. அரக்கன், இராவணன். “முரித்தவாறு


1. திருமுறை - 2.79.1

2. திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம்