38. | நீநின்று தானவர் மாமதில் மூன்றும் நிரந்துடனே தீநின்று வேவச் சிலைதொட்ட வாறென் திரங்குவல்வாய்ப் பேய்நின்று பாடப் பெருங்கா டரங்காப் பெயர்ந்துநட்டம் போய்நின்று பூதந் தொழச்செய்யும் மொய்கழற் புண்ணியனே | | 15 |
39. | புண்ணியங்கள் செய்தனவும் பொய்ந்நெறிக்கட் சாராமே எண்ணியோ ரைந்தும் இசைந்தனவால் - திண்ணிய கைம்மாவின் ஈருரிவை மூவுருவும் போர்த்துகந்த அம்மானுக் காட்பட்ட அன்பு. | | 16 |
என்” - என்றது, ‘பிழை நோக்கி ஒறுத்தல் வேண்டியோ’ என்றபடி. ஒறுத்தபின் இசைபாடித் துதிக்க அருள்செய்தமையும் கேட்டகப்படுவதால், ‘பிழை செய்தவரும் அஃது உணர்ந்து பணிந்தால், பிழையை நோக்காது அருள் செய்பவன் நீ’ என்பதும் குறிக்கப்பட்டதாம். “ஆடி” நான்கும் பெயர்கள். அவற்றுள் முதற்கண் உள்ளத்தில் இகர விகுதி செயப்பட்டு பொருட்டாயும், ஏனையவற்றில் அது வினை முதற் பொருட்டாயும் நின்றது. ஆறு - கங்கை. ‘அனலோ’ என்றாயினும். ‘அனலின்கண்’ என்றாயினும் ஏற்கும் உருபு விரித்துக்கொள்க. ‘நீற்றின் கண்’ என ஏழாவது விரிக்க. ‘நீ ஆடுபவன்; நீ அரக்கனது தோளையும் முடியையும் முரிக்கக் காரணம் என்ன? என வினைமுடிக்க. “தலம்” மூன்றும், ‘இடம்’ என்னும் பொருளன. ‘அடிகளாகிய தலம், முடியாகிய தலம்’ என்க. 38. அ. சொ. பொ.: தானவர் - அசுரர். நிரந்து - ஒருங்கே. உடனே - விரைவில். ‘தீயின்கண் நின்று’ என உருபுவிரிக்க. சிலை - வில். தொடுதல் - வளைத்தல். இது , அம்பெய்தலாகிய தன் காரியம் தோற்றி நின்றது. திரங்கு - தசை மெலிந்து தொங்கிய. வல் வாய் - பிணத்தைத் தின்னும் வாய். பெயர்ந்து - புடை பெயர்ந்து. ‘நட்டம் செய்யும்’ என இயைக்க. ‘பூதம் போய் நின்று தொழ’ என மாறிக் கூட்டுக. ‘வந்து’ என்பதனை, ”போய்” என்றது இடவழுவமைதி. எனவே, ‘நின்பால் வந்து தொழ’ என்றவாறாம். மொய் கழல் - பாதத்தைச் சூழ்ந்த கழல். “மதில் மூன்றும் புண்ணியன் - அற வடிவினன். வேவச் சிலைதொட்டவாறு என்” என்றதற்கு, முன்பாட்டில் “நீ முரித்தவாறு என்” என்றதற்கு உரைத்தவாறே உரைக்க. பின்னிரண்டடிகள் ஆசெதுகை பெற்றன. 39. அ. சொ. பொ.: ‘(யாம்) பொய்ந் நெறிகளில் சேராமல் விலகியதுடன், செய்த செயல்களும் புண்ணியங்களே. அஃது (எவ்வாற்றால் எனின்) எண்ணப்பட்ட ஐம்பொறிகளும் அம்மானுக்கு ஆட்பட்ட அன்பிற்கு இசைந்தவாயின’ இயைத்துப் பொருள் கொள்க. உம்மை, இறந்தது தழுவிய எச்சம். எண்ணிய - ‘ஐந்து’ என்று
|