40. | அன்பால் அடைவதெவ் வாறுகொல் மேலதோ ராடரவம் தன்பால் ஒருவரைச் சாரவொட் டா(து) அதுவேயுமின்றி முன்பா யினதலை யோடுகள் கோத்தவை ஆர்த்துவெள்ளை என்பா யினவும் அணிந்தங்கோர் ஏறுகந் தேறுவதே. | | 17 |
எண்ணப்பட்ட. ஈற்று அகரம் தொகுத்தல். ஆல், அசை, கைம்மாயானை, “ஈர் - உரிவை”, வினைத் தொகை ‘உரித்த தோல்’ என்பது பொருள். மூவுருவம் - மும்மூர்த்தி உருவம். ‘அன்பிற்கு’ என நான்காம் உருபு விரித்து. ‘அன்பு செய்தற்கு’ என உரைக்க. ‘ஐம்பொறிகள் அன்பு செய்தற்கு இசைந்தன’ என்றமையால், ‘இசையாது மாறிச் செல்லுதலே அவற்றின் இயல்பு’ என்பதும், ‘அவற்றை அவ்வாறு இசையச் செய்தல் வேண்டும்’ என்பதும் குறிப்பால் உணர்த்தப்பட்டன. ‘ஈருரிவை, மூவுருவம்’ என்பது எண்ணலங்காரநயம் தோற்றி நின்றது. அ. சொ. பொ.: ‘கொல், ஐய இடைச்சொல். அதனால்,அடையுமாற்றை நீரே அருளுதல் வேண்டும்’ என்பது குறிப்பெச்சமாயிற்று. ‘ஐயரே, நும் மேலது’ என முன்னிலையை வருவித்து, ‘நும்மைப் பிறர் அன்பால் அடைவது எவ்வாறு கொல்’ என முடிக்க. ஓர் அரவு, முடிமேல் உள்ளது. ஆடு அரவு - படமேடுத்து ஆடுகின்ற பாம்பு. ‘ஆகவே அது சீறுகின்றது’ என்றதாம். ‘முன்பு ஆயின’ எனப்பிரித்து, ‘தலை ஓடுகள்’ என முடித்து, ‘அவை கோத்து’ என வேறெடுத்துக் கொண்டு உரைக்க. ‘கோத்து ஆர்த்து, அணிந்து, உகந்து ஏறுவது ஓர் ஏறு’ என்க. எறு - இடபம். ‘அது பாய்வதால் அச்சம் உண்டாதலுடன், யானை மீதும், குதிரை மீதும் ஏறாமல், இடபத்தின்மேல் ஏறுவதால், நன்கு மதிக்கவும் இயலவில்லை’ என்பதாம். ‘கடகரியும் பரிமாவும் தேரும்உகந்தேறாதே இடபம்உகந் தேறியவா றெனக்கறிய இயம்பேடீ’1 என்றது காண்க. உகத்தல் - விரும்புதல். ‘பாம்பும், இடபமும் பகையாயினாரைச் சீறுதலும், பாய்தலும் செய்யுமேயல்லது, அன்பரை ஒன்றும் செய்யா’ என்பதும், ‘யானை குதிரைகளின் மேல் ஏறியும், மணி மாலைகளை அணிந்தும் யாம் பெருமை பெற வேண்டுவதில்லை’ என்பதும், ‘எவ்வாறு கொல்’ என்னும் ஐயத்தை நீக்கும் விடைகள் என்பது கருத்து. “பூணாணாவதோர் அரவங்கண் டஞ்சேன்”2 என்று அருளிச்செய்தமை காண்க.
1. திருவாசகம் - திருச்சாழல் - 15 2. திருமுறை 7.15.1.
|