41. | ஏறலால் ஏறமற் றில்லையே எம்பெருமான் ஆறெலாம் பாயும் அவிர்சடையார் - வேறோர் படங்குலவு நாகமுமிழ் பண்டமரர்ச் சூழ்ந்த தடங்கடல்நஞ் சுண்டார் தமக்கு. | | | | 18 |
42 | தமக்கென்றும் இன்பணி செய்திருப் பேமுக்குத் தாமொருநாள் எமக்கென்று சொன்னால் அருளுங்கொ லாமிணை யாதுமின்றிச் சுமக்கின்ற பிள்ளைவெள் ளேறொப்ப தொன்றுதொண் டைக்கனிவாய் உமைக்கென்று தேடிப் பொறாதுட னேகொண்ட உத்தமரே. |
41. ‘எம்பெருமானும், அவிர் சடையாரும் ஆகிய நஞ்சுண்டார் தமக்கு ஏற, ஏறலால் மற்று இல்லையே’ என முடிக்க. ‘பெருமான்’ என்பது ஒருமையாயினும் உயர்த்துக் கூறும் சொல்லாதலின் பண்மையோடு மயங்கிற்று. “இல்லையே” என்னும் ஏகாரம் வினாப் பொருட்டாய், ‘உறவாகவும் விரும்பிலர்’ என்னும் குறிப்பினதாய் நின்றது. “ஆறு” என்றது ஆகுபெயராய் அதன் நீரைக் குறித்தது. வேறோர் நாகம், உயர்ந்த பாம்பு, அது ‘வாசுகி’ என்பது. ‘உமிழ்ந்த நஞ்சு, சூழ்ந்த நஞ்சு’ எனத் தனித்தனி இயைக்க. ‘அமரரை’ என்னும் இரண்டாம் உருபு தொகுத்தலாயிற்று. ‘அமரர் சூழ்ந்த’ என்பது பாடம் அன்று, முன்னைப் பாட்டில் கூறியவாறு, ‘ஏற்றையே உகந்து ஏறுவது இல்லாமையாலன்று; விரும்பாமையால்’ என்பது இங்குக் கங்கையைத் தாங்கி மண்ணுலகினரைக்காத்தமை, நஞ்சை உண்டு விண்ணோரைக் காத்தமை இவற்றைக் குறித்த குறிப்பால் உணர்த்தப்பட்டது. 42. “இணை யாதும் இன்றி” என்றது. ‘காளைகளைப் பயன்படுத்துகின்றவர்கள் இரண்டை யிணைத்தே பயன் படுத்துவர் ஆகலின் அவ்வாறு இணைத்தற்கு ஒன்று கிடைக்காமையால் ஒரு காளையையே உடையவராய் இருக்கின்றார்’ என்றபடி. ‘இனி ஒற்றைக் காளையையே பயன்படுத்துவதாயினும் உமாதேவி ஊர்வதற்கு மற்றொரு காளை இன்றியமையாது வேண்டும்; அஃது இல்லாமையால், அவளையும் தமது ஒரு காளையின்மேலே உடன் ஏற்றிக் கொண்டு வருகின்றார்’ என மேலும் குறிகூறியபடி. ‘இத்தகைய இலம்பாடு (வறுமை) உடையவர், அவருக்கென்றே நாம் என்றும் பணிசெய்திருப்பினும், ‘எமக்கு என்று என்று ஒன்று இரந்தால், அதனை ஈய வல்லவராவரோ - என ஐயுறுகின்றோம்’ என்பது இப்பாட்டிற் கூறப்பட்ட பொருள். இதுவும் நிந்தாத் துதி. “ஒருநாள் அருளுங்கொல்” என்றமையால், ‘எந்நாளும்
|