43. | உத்தமராய் வாழ்வார் உலந்தக்கால் உற்றார்கள் செத்த மரமடுக்கித் தீயாமுன் - உத்தமனாய் நீளாழி நஞ்சுண்ட நெய்யாடி தன்திறமே கேளாழி நெஞ்சே கிளர்ந்து. | | 20 |
திருச்சிற்றம்பலம்
அருள மாட்டாது வாளாதே இருப்பாரோ’ என்பதும் போந்தது. ஆம், அசை. “எமக்கு என்று” என்பதன் பின், ‘ஒன்று’ என்பது வருவிக்க. “சொன்னால்” என்றது, ‘வேண்டினால்’ என்றபடி “பிள்ளை” என்றது, இளமையைக் குறித்தது. “இணை யாதும் இன்றி” என்பது, ‘தனியே சுமக்கின்றது’ என்பதைக் குறித்தற்கும், “வேறு ஒப்பது ஒன்று பெறாது” என்பது ‘இணைத்தற்கு இல்லை’ என்பதைக் குறித்தற்கும் கூறியன ஆகலின், கூறியது கூறல் ஆகாமையறிக. தொண்டைக் கனி - கொவ்வைக் கனி. உத்தமர் - எல்லாரினும் மேலானவர். என்றது, ‘மற்றொரு காளையை இவர் கொள்ளாமைக்குக் காரணம் வறுமையன்று; உமையாளையும் ஒருகாளைமேல் உடன்கொண்டு செல்ல விரும்புதலேயாம்’ என்பதை உணர்த்தி, ‘ஆகவே, ‘இவர் எம்மைத் தம் அடிமையென்று கருதி யிரங்கி, வேண்டியவற்றை ஈபவரே எனவும் குறித்தவாறு. நம்பியாரூரரும் இவ்வாறே, முன்னர், “ஊர்வது ஒன்று(ஏ) உடையான்”1 எனக் கூறிப் பின்னர், “உம்பர்கோன்”1 என அவனது பெருமை யுணர்த்தியவாறு அறிக. 43. அ. சொ. பொ.: உத்தமராய் - கல்வி, செல்வம், அதிகாரம் முதலியவற்றில் ஒன்றாலேனும், பலவற்றாலேனும் உயர்ந்தவர்களாய். ‘வாழ்வாரும்’ என்னும் உயர்வு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. உலந்தக்கால் - இறந்து விட்டால். ‘உயர்ந்தவர்களாய் வாழ்ந்தவர்களாயிற்றே’ என்று எண்ணுதல் இன்றி, எல்லாரோடும் ஒப்பச் செத்த மரத்தையே (காய்ந்த விறகையே) அடுக்கி, அவற்றோடு ஒன்றாகச் சேர்த்து! உறவினர்கள் தீத்து (எரித்து) விடுவார்கள் ‘இவ்வளவே இவ்வுலக வாழ்வு’ என்றபடி. ‘ஆகையால் இந்த வாழ்விலே ஆழ்தலையுடைய நெஞ்சே, உன்னையும் அவ்வாறு செய்தற்கு முன், சிவனது புகழை அறிந்தோர் சொல்லக் கேள்’ என்க. ‘கேட்டால், ‘நிலையான வாழ்வைப் பெறுவாய்’ என்பது குறிப்பெச்சம். “உத்தமன்” என்பதற்கு, முன்னைப்பாட்டில் “உத்தமர்” என்றதற்கு உரைத்தவாறே உரைக்க. “ஆழி” இரண்டில் முன்னது, ‘கடல்’ என்னும் பொருட்டாயும், பின்னது ‘ஆழ்தல் உடையது’ என்னும் பொருட்டாயும் நின்றன. ‘கிளர்ந்து கேள்’ என முன்னே
1. திருமுறை - 7.64.2
|