பக்கம் எண் :

221திருக்கைலாய ஞானஉலா

148.அங்கை வளைதொழுது காத்தாள்; கலைகாவாள்;
நங்கை இவளும் நலம்தோற்றாள்; - அங்கொருத்தி

6. தெரிவை

149.ஆரா அமுதம் அவயவம் பெற்றனைய
சீரார் தெரிவைப் பிராயத்தாள்; - ஓரா
150.மருளோசை யின்மழலை வாய்ச்சொலால் என்றும்
இருள்தீர் புலரியே ஒப்பாள்; - அருளாலே
151.வெப்பம் இளையவர்கட்(கு) ஆக்குதலால் உச்சியோ(டு)
ஒப்பமையக் கொள்ளும் உருவத்தாள் - வெப்பந்தீர்ந்(து)

கண்ணி - 148: அங்கை தொழுது வளை காத்தாள் - மற்றவருடன் கூடத் தானும் அகங்கைகளைக் குத்துக் கும்பிட்ட மையால் வளைகள் ‘கழன்று வீழாதபடி காத்துக் கொண்டாள். ஆயினும் உடையை வீழாமல் காத்தாள் இல்லை. நலம் தோற்றாள் - அழகினை இழந்தாள்.

கண்ணி - 149: இருபத்தாறாவது முதல் முப்பத்தொன்றாம் ஆண்டு முடியத் தெரிவைப் பருவம்

ஆர்தல் - நிரம்புதல். ஆரா அமுதம் - சுவை மிகுதியால் தெவிட்டாத அமுதம். அவயவம், உறுப்புக்கள் பலவும் நல்லன வாய் அமைந்த உடம்பு. இஃது ஆகுபெயர். உடம்பு, பெண் உடம்பு, ‘அமுதம் உடம்பு பெற்றது போல்வாள்’ என்றது இல் பொருள் உவமை. சீர்மை - செம்மை.

கண்ணி - 149, 150: ஒரா - பொருள் உணர வாராத மழலை - என்க. ‘மழலையின் மருள் ஓசை வாய்ச் சொல்’ என மாறுக. அஃதாவது, ‘மழலை போலும் ஓசையையுடைய வாய்ச் சொல்’ என்பதாம். இஃது இனிது பொருள் விளங்குதல் இன்மையும் இனிமையுடை மையும் பற்றி வந்த உவமை. ‘மங்கையரும், மடந்தையரும் வாய்திறந்து பேச மாட்டார்கள். பேரிளம் பெண் இனிது விளங்க எடுத்துப் பேசுவாள். தெரிவை இரண்டும் இன்றி இடைநிலையதாகப் பேசுவாள்’ என்பதாம். “மருள்”, உவம உருபு.

‘இத்தன்மைத்தான் சொல் விடியற் காலத்தை ஒக்கும்; அஃதாவது பொருள் விளங்கியும், விளங்காதும் நிற்கும்’ என்பதாம்.

கண்ணி - 150, 151: அருள், இங்குக் காதற் குறிப்பு. உச்சி - உச்சிப் போது; நண்பகல் உருவம் - சாயல் “வெப்பம் தீர்ந்து” என்பது, அதன் எதிர்மறையாகிய ‘குளிர்ச்சியைத் தந்து’ எனப் பொருள் தந்தது.