பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை224

163.பலகருதிக் கட்டிக் கரியவாய்க் கோடி
அலர்சுமந்து கூழைய வாகிக் - கலைகரந்(து)

 

164.உள்யாதும் இன்றிப் புறங்கமழ்ந்து கீழ்த்தாழ்ந்து
கள்ஆவி நாறும் கருங்குழலாள் - தெள்ளொளிய
165.செங்கழுநீர்ப் பட்டுடுத்துச் செங்குங் குமம்எழுதி
அங்கழுநீர்த் தாமம் நுதல்சேர்த்திப் - பொங்கெழிலார்
166.பொற்கவற்றின், வெள்ளிப் பலகை மணிச்சூது
நற்கமைய நாட்டிப் பொரும்பொழுதில் - விற்பகரும்
167.தோளான், நிலைபேறு, தோற்றம், கேடாய்நின்ற
தாளான் சடாமகுடம் தோன்றுதலும், - கேளாய

கண்ணி - 163, 164: பல கருதிக் கட்டுதல் - குழல், பனிச்சை, அளகம் முதலிய பல வடிவங்களாகக் கட்டுதல். கோடி - மிகப் பல. கூழை - கடைகுவிதல். கலை - கை வினைத் திறம், உள் யாதும் இன்றிப் புறம். கமழ்தல் - கமழும் பொருள் எதுவும் இல்லாமல் தானே இயற்கையில் கமழ்தல். கீழ்த் தாழ்தல் - நீண்டு தொங்குதல். கள் - தேன். ஆவி - அகிற் புகை.

கண்ணி - 165: செங்கழுநீர்ப் பட்டு - செங்கழுநீர்ப் பூப்போலும் பட்டுய குங்குமத்தால் எழுதுதல் மார்பிலும், தோளிலும். தாமம் - மாலை. நுதல் - நெற்றி.

கண்ணி - 166: கவறு - சூதாடு கருவி. மணி - சூதுக்கு உரிய காய்கள். நற்கு - நன்கு. பொருது - சூது போர் ஆடுதல்.

கண்ணி - 167: நிலைபேறு - காத்தல் தொழில். தோற்றம் - படைத்தல் தொழில். கேடு - அழித்தல் தொழில். ‘இம்மூன்றையும் சிவனது திருவடியே செய்யும்’ என்பது பற்றி. “இவையாய் நின்ற தாளான்” என்றார். “போற்றி யருளுக நின் ஆதியாம் பாத மலர்”1 என்னும் திருவாசகத்தையும் காண்க. சிவனது சத்தியை அவனது திருவடியாக உபசரித்தல் வழக்கு. கண்ணி - 169, 170 - இல் உள்ள “சொலற்கரிய தேவாதி தேவன் சிவனாயின், தேன் கொன்றைப் பூவார் அலங்கல் அருளாது போவானேல்” என்பதை இங்குக் கூட்டுக.

கண்ணி - 167 - 169: ‘நாண், ஏண்’ - என்னும் அஃறிணைப் பொருள்கள் ‘ஆர்’ விகுதி புணர்ந்து உயர்திணை போலச்


1. திருவெம்பாவை - 20.