| 168. | நாணார் நடக்க; நலத்தார்க் கிடையில்லை; ஏணார் ஒழிக; எழிலொழிக; - பேணும் |
| 169. | குலத்தார் அகன்றிடுக; குற்றத்தார் வம்மின்; நலத்தீர் நினைமின்நீர் என்று - சொலற்கரிய |
| 170. | தேவாதி தேவன் சிவனாயின் தேன்கொன்றைப் பூவார் அலங்கல் அருளாது - போவானேல், |
| 171. | கண்டால் அறிவன் எனச்சொல்லிக் கைசோர்ந்து வண்டார்பூங் கோதை வளந்தோற்றாள் - ஒண்டாங்கு |
சொல்லப்பட்டன. கேளாய நாண் - மகளிர்க்குச் சிறந்த நட்பாகிய நாண். ஏண் - வலிமை. நலத்தார் - அழகினை உடைய மகளிர் என இவ்வாறு தன்னையே பிறர்போலக் கூறினார். அழகுடைய மகளிர்க்கு இடை யில்லாமை இயல்பாதலின் எழுந்து சென்று அவனைக் காண இயலாது. அதனால் அவனே வலிந்து தனது கொன்றை மாலையை எனக்கு ஈயக்கடவன். அங்ஙனம் அவன் தான் கடவதை உணர்ந்து கொன்றை மாலையை ஈயாதே அப்பாற் போய் விடுவானாயின், எனது நாண் ஒழியட்டும்; வலிமை ஒழியட்டும் அழகு ஒழியட்டும்; ‘இவைகளை யெல்லாம் ஒழியாது காப்பாற்றும் குலமகளிர்கள் நாங்கள்’ என்று சொல்லிக் கொள்பவர்கள் எனக்கு உறவாகாது ஒழியட்டும்; அந்தக் குல மகளிரால் குற்றம் உடையவர்களாகச் சொல்லப்படுகின்ற என் போன்ற மகளிரே, என்னுடன் வாருங்கள்; ‘போதும், போதும்’ என்று துயரத்தால் வருந்துகின்றவர்களே, அத்துயரம் நீங்க வேண்டுமாயின் அவனை நினையுங்கள் - என்று இன்ன பல சொல்லி அங்கலாயத்து அலம் - போதும் அலத்தீர் - போதும் என்று சொல்கின்றவர்களே, ‘அலந்தீர்’ என்பதும் பாடம். கண்ணி - 171: கண்டால் - (பின்பு ஒருஞான்று அவனை நான் காணாமலா போய்விடுவேன்?) கண்டால். அறிவன் - அவன் இவ்வாறு கடவது கடந்த பழிக்குத் தீர்வு காணும் வழியை நான் அறிவேன். என்று இவ்வாறெல்லாம் வாய்ப் பறை சாற்றினாளே யன்றி, உண்மையில். கை சோர்ந்து வளம் தோற்றாள் - செயலற்று வீழ்ந்து, தன் பெண்மை வளத்தை யெல்லாம் முற்ற இழந்துவிட்டாள்.
|