| 179. | காந்தட் குலம்பழித்தாள்; காமவேள் காதலாள்; சாந்தம் இலங்கும் அகலத்தாள்; - வாய்ந்துடனே |
| 180. | ஏய்ந்து குவிந்து திரண்டு மறிந்திருபால் தேய்ந்து துடித்தச் செழும்பவளம் - காய்ந்திலங்கு |
| 181. | முத்தமும் தேனும் பொதிந்து முனிவரையும் சித்தம் திறைகொள்ளும் செவ்வாயாள் - ஒத்து |
| 182. | வரிகிடந்(து) அஞ்சனம் ஆடி மணிகள் உருவம் நடுவுடைய வாகிப் - பெருகிய |
| 183. | தண்ணங் கயலுஞ் சலஞ்சலமும் தோன்றுதலால் வண்ணங் கடலனைய வாட்கண்ணாள் - ஒண்ணிறத்த |
சூழ்போந்து - முழுதும் படர்ந்து. “கண்டார்” என்றது ஆடவரை. அணங்கு - நோய். காதல் நோய். “அமுதம்” என்பதற்கு. ‘அமுதக் குடம்’ என உரைக்க. அதுகண்டார்க்கு மகிழ்ச்சியைத் தருவது. இணங்கு ஒத்து - ஆடவர் இணங்கு தற்குப் பொருந்தி. கோலங்கட்கெல்லாம் கோலம் - அழகுகட் கெல்லாம் அழகு. “நாகிள” என்பது மீமிசைச் சொல். வேய் - மூங்கில். அங்கை - அகங்கை. கண்ணி - 179: காந்தள் - காந்தள் மலர். ஒரு மலரை மட்டுமன்று, அம்மலரின் குலம் முழுவதையுமே பழித்தாள். காதலாள் - காதலுக்கு ஏற்றவள். சாந்தம் - சந்தனம். அகலம் - மார்பு. கண்ணி - 180, 181: இரண்டும் ஏய்ந்து குவிந்து - இரண்டு இதழ்களும் ஒன்று சேர்ந்து குவிந்து. மறிந்து - பின் நீங்கி. (இங்ஙனம் செயற்பட்டு) திரண்டு - நடுவிடம் திரண்டு. இருபால் தேய்ந்து - கடையிருபக்கமும் சிறுகி. துடித்து - துடித்தலைச் செய்து. செழும் பவளம் காய்ந்து இலங்கி - செம்மையான பவழத்தைக் கோபித்து விளங்கி. முத்தமும் - பற்களும். தேனும் - மொழியும். (இவையிரண்டும் உருவகம்) பொதிந்து - நிரம்பி. திறை - கப்பம். ‘திறைகொள்ளல்’ என்பது. ‘தன்வழிப்படுத்தல்’ என்னும் பொருட்டாய், “முனிவரை” என்னும் இரண்டாவதற்கு முடிவாயிற்று. உம்மை சிறப்பு. இதனால் ஏனை ஆடவரைத் திறை கொள்ளல் சொல்ல வேண்டாவாயிற்று. கண்ணி - 182, 183: வரி - செவ்வரிகள். அஞ்சனம் ஆடி - மையினுள் முழுகி. மணிகள் - கண்மணிகள். ‘மணிகளின் உருவம்’ என்க. “சலஞ்சலம்” என்பது ‘சலம் + சலம்’ என இரு மொழியாய்
|