பக்கம் எண் :

229திருக்கைலாய ஞானஉலா

190.வெண்பா விரித்துரைக்கும் போழ்தில் விளங்கொளிசேர்
கண்பாவு நெற்றிக் கறைக்கண்டன் - விண்பால்
191.அரிஅரணஞ் செற்றாங்(கு) அலைபுனலும் பாம்பும்
புரிசடைமேல் வைத்த புராணன் - எரிஇரவில்
192.ஆடும் இறைவன், அமரர்குழாம் தற்சூழ
மாட மறுகில் வரக்கண்டு - கேடில்சீர்
193.வண்ணச் சிலம்படி மாதரார் தாம்உண்ட
கண்ணெச்சில் எம்மையே ஊட்டுவான் - அண்ணலே
194.வந்தாய்; வளைகவர்ந்தாய்; மாலும் அருந்துயரும்
தந்தாய் இதுவோ தகவுஎன்று - நொந்தாள்போல்
195.கட்டுரைத்துக் கைசோர்ந்து அகமுருகி மெய்வெளுத்து
மட்டிவரும் பூங்கோதை மால்கொண்டாள் - கொட்டிமைசேர்
196.பண்ணாரும் இன்சொற் பணைப்பெருந்தோள் செந்துவர்வாய்ப்
பெண்ஆர வாரம் பெரிதன்றே - விண்ணோங்கி
197.மஞ்சடையும் நீள்குடுமி வாள்நிலா வீற்றிருந்த
செஞ்சடையான் போந்த தெரு.

 

பெண்ணீர்மை காமின்; பெருந்தோளி ணைகாமின்;
உண்ணீர்மை மேகலையும் உள்படுமின் - தெண்ணீரக்
காரேறு கொன்றையந்தார்க் காவாலி கட்டங்கன்
ஊரேறு போந்த துலா.

திருச்சிற்றம்பலம்


‘அஃதான்று’ என்பது பாடம் அன்று. ‘இசையின் கண் கேளா என உருபு விரித்துரைக்க.

கண்ணி - 191, 192: அரி - காற்று. ‘விண்பால் காற்றுப் போல விரைந்து செல்கின்ற அரணம்’ என்க. இவை திரிபுரம். ஆங்கு - அதுபோல. ‘இரவில் எரி ஆடும் இறைவன்’ என்க.

கண்ணி - 193 - 195: ‘சிலம்படியையுடைய மாதாரார்’ என்க. மால் - மயக்கம். நொந்தாள் போல் - வெறுத்தாள்போல. “கை சோர்ந்து” என்பதில் கை, இடைச் சொல். மட்டு - தேன். இவரும் - கொப்புளிக்கின்ற.

கண்ணி - 195 -197: “கொட்டு இமை சேர் பெண்” என்றது, ‘மானுடப் பெண் இனம்’ என்றபடி.