பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை230

மஞ்சு - மேகம். குடுமி, மாளிகைகளின் சிகரம். ‘வீற்றிருந்த, போந்த’ என்னும் பெயரெச்சங்கள் அடுக்கி, “தெரு” என்னும் ஒருபெயர் கொண்டன. “தெரு ஆரவாரம் பெரிது” என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது.

ஈற்றில் நிற்கும் இவ்வெண்பாப் பிற்காலத்தவரால் சேர்க்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது. (சென்னைச் சைவ சித்தாந்த சமாசப் பதிப்பு - 1940.)

‘பக்குவ வேறு பாட்டாற் பலவகைப்படும் நல்லோர் யாவரும் பெருமானது காட்சியால் தம் வசம் இழப்பர்’ என்பது இப்பிரபந்தத்தின் உள்ளுறை.

திருக்கைலாய ஞானஉலா முற்றிற்று.