பக்கம் எண் :

233கயிலைபாதி காளத்திபாதி யந்தாதி

303.அரணம் ஒருமூன்றும் ஆரழலாய் வீழ
முரணம்பு கோத்த முதல்வன் - சரணமே
காணுமால் உற்(று)அன்றன் காளத்தி கைதொழுது
பேணுமால், உள்ளம் பெரிது.

4

304.பெரியவர், காணீர்என் உள்ளத்தின் பெற்றி
தெரிவரிய தேவாதி தேவன் - பெரிதும்
திருத்தக்கோர் ஏத்தும் திருக்கயிலைக் கோனை
இருத்தத்தான் போந்த(து) இடம்.

5

305.இடப்பாகம் நீள்கோட் டிமவான் பயந்த
மடப்பாவை தன்வடிவே யானால், - விடப்பாற்
கருவடிசேர் கண்டத்தெம் காளத்தி ஆள்வார்க்(கு)
ஒருவடிவே அன்றால் உரு.

6



303.குறிப்புரை: ஆர் அழல் - தணித்தற்கு அரிய நெருப்பு. முரண் - வலிமை. சரணம் - பாதம். காணும் மால் - காண எழுந்த மயக்கம். மயக்கம் - பித்து; பேரவா பேணும் - மறவாது நினைக்கும். 'உள்ளம் பெரிது பேணும்' என இயைக்க ஆல், அசை.

304.குறிப்புரை: பெரியவர் - பெரியவர்களே, (சிவனடியார்களே) இஃது அண்மை விளி. காணீர் - அறிமின் இதனை இறுதிக்கண் கூட்டுக. இருத்துதல் - இருக்கவைத்தல் "இடம் போந்தது" என மாற்றுக. போந்தது - அமையப் பெற்றது. 'திருக்கயிலைக் கோனை இருத்துதற்கு மட்டுமே இடம் அமையப் பெற்றது; மற்றொன்றை இருத்த இடம் அமையப் பெறவில்லை; இஃது என் உள்ளத்தின் பெற்றி; காணீர்' என வினை முடிக்க. பெற்றி - தன்மை. 'சிவபெருமானைத்தவிரப் பிறிதொன்றை நினையாத தன்மையுடைத்து' என நெஞ்சின் தன்மை யைக் குறிப்பால் வியந்தவாறு. பிறிதொன்றற்கு இடம் அமையப் பெறாமையைக் குறை போலக் கூறினமையின். இது பழிப்பதுபோலப் புகழ்த்திறம் புனைந்ததாம். பெரிதும் தக்கோர் - மிகவும் தக வாய்க்கப் பெற்றவர். திரு - திருவருள். 'திரு பெரிதும் தக்கோர்' என மாறிக் கூட்டுக. "திருத்தக்கோர் ஏத்தும்" என்றமையால், முன்னர், "தெரிவரிய" என்றது. திருவாய்க்கப் பெறாதவரை நோக்கியாயிற்று.

305. விடப்பால் - நஞ்சு பொருந்திய பகுதி. 'விடப் பாலாய்' என ஆக்கம் வருவிக்க. வடி - வடிவு; கடைக் குறை. "பாகம்" என்பது ஆகுபெயராய், பாகமாகிய வடிவையே குறித்தது. 'இடப் பாகமாகிய வடிவம் பாவை வடிவேயானால், காளத்தி ஆள்வார்க்கு உரு