308. | உலக மனைத்தினுக்கும் ஒண்ணுதல்மேல் இட்ட திலக மெனப்பெறினும் சீசீ; - இலகியசீர் ஈசா, திருக்கயிலை எம்பெருமான், என்றென்றே பேசா திருப்பார் பிறப்பு. | | 9 |
309. | பிறப்புடையர், கற்றோர், பெருஞ்செல்வர், மற்றும் சிறப்புடைய ரானாலும் சீசீ; - இறப்பில் |
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு.1 என உலகத்தின் நிலைபேற்றிற்கு கண்ணோட்டத்தினைக் காரணமாகக் கூறிய திருவள்ளுவர், அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு ஐந்துசால்பு ஊன்றிய தூண்2 எனக் கண்ணோட்டத்தினைச் சால்பாகிய பாரத்தைத் தாங்கும் தூண்களுள் ஒன்றாகக் கூறி, சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் தாங்காது மன்னோ பொறை.3 என, 'சான்றோர் தனது சான்றாண்மையைக் கைவிடின் உலகம் நிலை கலங்கிவிடும்' எனக் கூறியதையும், 'கண்ணோட்டத்தின் மேல் எல்லை நண்பர் பெயக் கண்டும் நஞ்சினை உண்டு அமைதலே'4 எனக் கூறியதையும் ஊன்றியுணர்வார்க்கு இவ்வாசிரியர், "காளத்தி ஆள்வார் நஞ்சு உண்டமையால் உண்டிவ் வுலகு" எனக் கூறியது சிறிதும் வியப்பினைத் தராது. 'சிவபெருமானது திருவருளானே உலகம் உள்ளது' என்பது இவ்வெண்பாவின் ஆழ்ந்த பொருள். 308.குறிப்புரை: "எம்பெருமான்" என்றதும், "ஈசா" என்றதுபோல 'எம்பெருமானே' என விளியேயாம். அடுக்குப் பன்மை பற்றி வந்தது. பேசுதல், இங்குத் துதித்தல். 'துதியா திருப்பார் பிறப்புப் பிறவகையில் எல்லாம் உலகில் சிறந்து விளங்கிற்றாயினும் கண்ணிலா முகம்போல அருவருக்கப் படுவதேயாம்' என்றபடி. 'சீசீ எனப்படுவதே' என ஒருசொல் வருவித்து முடிக்க. 309. குறிப்புரை: பிறப்பு - குலம். அது தலைமை பற்றி மேற் குலத்தைக் குறித்தது. கற்றோர் - மிகக் கற்றவர். "சீசீ" என்பதற்கு,
1. திருக்குறள் - 571. 2. " - 983. 3. " - 990. 4. " - 580.
|