பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை236

கடியார் நறுஞ்சோலைக் காளத்தி ஆள்வார்
அடியாரைப் பேணா தவர்.

10

310.அவரும் பிறந்தவராய்ப் போவார்கொல் ஆவி!
எவரும் தொழுதேத்தும் எந்தை, - சிவம்மன்னு
தேக்குவார் சோலைத் திருக்கயிலை ஏத்தாதே
போக்குவார் வாளா பொழுது.

11

311.வாளா பொழுது கழிக்கின்றார் மானுடவர்
கேளார்கொல்; அந்தோ! கிறிப்பட்டார்; - கீளாடை
அண்ணற் கணுக்கராய்க் காளத்தி யுள்நின்ற
கண்ணப்ப ராவார் கதை.

12


மேல் உரைத்தவாறு உரைக்க. இறப்பு - உயர்வு. 'தன்னின் உயர்ந்தில்லாத காளத்தியாகிய தலம்' என்க. கடி - நறுமணம். நறு - நல்ல.

310. குறிப்புரை: 'சிலர்' என்னும் தோன்றா எழுவாய் வருவித்து, 'பொழுது வாளா போக்குவார்; அவரும் பிறந்தாராய், ஆவிபோவார்கொல்' - என இயைத்து முடிக்க. "ஆவி போவார்" என்றது, 'இறப்பர்' என்னும் பொருட்டாய், 'இறத்தற்கே பிறந்தான்போலும்' எனப்பொருள் தந்தது. "பெயர்த்தும் செத்துப் - பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே"1 என்னும் அப்பர் திருமொழியை இங்கு ஒப்பிட்டு நோக்குக. கொல், ஐயம் இன்றாயினும் உள்ளது போலக் கூறினமையின் ஐயப் பொருட்டு.

"அவரும்" என்னும் உம்மை, 'ஏத்துவாரோடு' என இறந்தது தழுவிற்று. சிவம் - மங்கலம். தேக்கு, ஒரு வகை மரம். வார் - நீண்ட.

311. குறிப்புரை: "மானுடவர்" என்பதை முதலிற் கொள்க. பொழுது - கிடைக்கப் பெற்றுள்ள காலம், 'அதனை வாளா கழிக்கின்றார்; அந்தோ! கிறிப்பட்டார்; கண்ணப்பராவார் கதை கேளார்கொல்' என இயைத்து முடிக்க. காலம் இல்லாமற் போகவில்லை; கேட்டலைச் செய்தல் அரிதன்று; ஆயினும் கேட்டுப் பயனடைகின்றிலர்; கிறி - பொய்; உலக வாழ்க்கை. 'கிறிக்கண்பட்டார்' என ஏழாவது விரிக்க. அந்தோ, இரக்க இடைச் சொல், "ஆவார்" என்பது எழுவாய் வேற்றுமைச் சொல்லுருபு. "ஆவார்" என்ற எதிர்காலம் முக்காலத்திலும் பொதுவாய் நின்றது. 'ஒருபோதும் கேளார்போலும்' எனப் பொருள் தந்து நிற்றலின், ஐயப் பொருட்டு, 'கண்ணப்பர் கதை யைக் கேட்டலாகிய சிறு முயற்சியைச்


1. திருமுறை - 6.95.6