312. | கதையிலே கேளீர்; கயிலாயம் நோக்கிப் புதையிருட்கண் மாலோடும் சென்று - சிதையாச்சீர்த் தீர்த்தன்பால் பாசுபதம் பெற்றுச் செருக்களத்தில் பார்த்தன்போர் வென்றிலனோ பண்டு. | | 13 |
செய்து பெரும்பயன் பெறலாய் இருக்க, ஆறறிவு படைத்த மக்களிற் பலர் அதனைச் செய்யாது காலத்தை வீணே கழிக்கின்றனர்' என இரங்கிய வாறு. கீள் - அரைநாண் அளவாகக் கட்டும் சீலை. 'கீளாகிய ஆடை' என்க. 312. குறிப்புரை: 'பண்டு பார்த்தன் இருட்கண் கயிலாயம் நோக்கி மாலோடும் போய்த் தீர்த்தன்பால் பாசுபதம் பெற்றுச் செருக்களத்தில் வென்றிலனோ! (அதனைக்) கதையிலே கேளீர் என இயைத்து முடிக்க. கதை, பாரதக் கதை. பார்த்தன் (அருச்சுனன்) முதற்கண் பெற்ற பாசபதாத்திரத்தை இந்திரன் பொருட்டாக, 'நிவாத கவசர், காலகேயர்' - என்னும் அசுரர்மேல் ஏவி அவர்களை அழித்ததனால் அவ்அத்திரம் மீண்டு கயிலாயத்திற்குச் சென்று விட, மறுபடியும் அவன் பதின்மூன்றாம் நாட் போர் முடிந்தபின் இரவில் கண்ணனுடன் கயிலைக்குச் சென்று சிவபெருமானை வணங்கி அவ்அத்திரத்தைப் பெற்று வந்து, பதின்மூன்றாம் நாட்போரில் தான் செய்த சபதப்படியே, தன்மகன் அபிமன்னு வைக் கொன்ற சயத்திரதனைப் பதினாலாம் நாள் சூரியன் மறைவதற்குள் கொன்று வெற்றி பெற்றான். இக்கதையே இவ்வெண்பாவிற் குறிக்கப்பட்டது. அருச்சுனன் சயத்திரதனைக் கொன்றதில் ஓர் அதிசயம் உண்டு. அருச்சுனன் செய்த சபதத்தைக் கேட்டுச் சயத்திரதன் தந்தை, 'தன் மகனை நாளைப் பகலுக்குள் எப்படியும் அருச்சுனன் கொன்றுவிடுவான்; அவனுக்குச் சிவன், மால் இருவர் துணைகளும் உண்டு' என்று அஞ்சி, சமந்த பஞ்சக மடுவில் இறங்கி, 'என் மகன் தலையைத் தரையில் எவன் வீழ்த்துகின்றானோ அவன் தலை அப்பொழுதே சுக்கு நூறாய் வெடித்துச் சிதறுக' என மந்திரம் செபித்துக் கொண்டிருந்தான் இறுதி நிலையில் அருச்சுனன் சயத்திரதன் தலையை அம்பினால் வீழ்த்த முயன்ற பொழுது, கண்ணன், 'இவன் தலையை வீழ்த்துதல் மட்டும் உனக்கு வெற்றியாகாது; அந்தத் தலை மடுவில் செபம் செய்துகொண்டிருக்கும் இவன் தந்தை கையில் போய்ச் சேர வேண்டும்' என்றான். அருச்சுனன் அப்பொழுது பாசுபதாத்திரத்தை எடுத்து மந்திரித்துத் தன் கருத்தை முடிக்க வேண்டி ஏவ, அது சயத்திரதன் தலையைக் கொய்து கொண்டுபோய் கண்ணைமூடிக் கொண்டு செபம் செய்யும் அவன் தந்தை கையில் சேர்த்தது. அவன்
|