313. | பண்டு தொடங்கியும், பாவித்தும் நின்கழற்கே தொண்டு படுவான் தொடர்வேனைக் - கண்டுகொண்(டு) ஆளத் தயாஉண்டோ, இல்லையோ? சொல்லாயே காளத்தி யாய்உன் கருத்து. | | |
314. | கருத்துக்குச் சேயையாய்க் காண்தக்கோர் காண இருத்தி திருக்கயிலை என்றால் - ஒருத்தர் அறிவான் உறுவார்க்(கு) அறியுமா றுண்டோ, நெறிவார் சடையாய் நிலை! | | 15 |
'ஏதோ பொருள்' என்று அந்தத் தலையைத் தரையிலே விடுத்தான். அதனால், அவனது மந்திர செபம் அவனுக்கே பலிக்க, அவன் தலை சுக்கு நூறாய் வெடித்துச் சிதறியது. இச்செயல் பாசுபதம் இல்லையேல் அருச்சுனனால் செய்திருக்க முடியாது அதனை யே, "பாசுபதம் பெற்றுப் பார்த்தன் போர் வென்றிலனோ பண்டு" என இவ்வாசிரியர் சிறந்தெடுத்து மொழிந்தார். 'சிவபெருமானை வணங்குவோர் செயற்கரிய செயலையும் செய்ய வல்லராவர்' என்பது இதன் கருத்து. புதை யிருள் - மிக்க இருள். மால், கண்ணன். தீர்த்தன்- பரிசுத்தன்; சிவபெருமான். பார்த்தன் - அருச்சுனன். 313. குறிப்புரை: "பண்டு" என்றது இளமைக் காலத்தை. 'தொடர்ந்து பாவித்தும்' என ஒருசொல் வருவிக்க. பாவித்தல் - நினைத்தல். இளமை தொட்டே இடைவிடாது நினைத்து வருதலை இவ்வாறு கூறினார். உம்மைகள் எண்ணும்மைகள். தொடர்தல் - பற்றி நிற்றல்."கண்டுகொண்டு" என்பதில் கொள், தற்பொருட்டுப் பொருண்மை விகுதி - அதனால், 'பிறர் வலிந்து காட்டாது, நீயே கண்டு' என்றதாயிற்று 'வலிந்து காட்டின் தயா இல்லையாகும்' என்பது பற்றி, 'நீயே கண்டு கொண்டு ஆள வேண்டும்' என்றார். "சொல்லாயே" என்பதை இறுதியிற் கூட்டுக. ஏகாரம் இரண்டனுள் முன்னது பிரிநிலை. பின்னது அசை. 314. குறிப்புரை: "காண் தக்கோர் காண" எனப் பின்னர் வருதலால், முன்னர், "கருத்துக்கு" என்றது 'காணத் தகாதார் கருத்துக்கு' என்றதாயிற்று. தகுதி அன்பு. "காண்டற் கரிய கடவுள் கண்டாய்; கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய்."1 என்ற அப்பர் திருமொழியையும் காண்க. இருத்தி - இருக்கின்றாய் 'திருக்கயிலைக்கண்' என ஏழாவது இறுதிக்கண் தொக்கது. 'அறிவான்
1. திருமுறை - 6.23.1
|