பக்கம் எண் :

245கயிலைபாதி காளத்திபாதி யந்தாதி

326.மகிழந்தலரும் வண்கொன்றை மேலே மனமாய்
நெகிழ்ந்து நெகிழ்ந்துள்ளே நெக்குத் - திகழ்ந்திலங்கும்
விண்ணுறங்கா வோங்கும் வியன்கயிலை மேயாய்என்
பெண்ணுறங்காள்; என்செய்கேன்? பேசு.

27

327.பேசும் பாசறியாள் பேதை; பிறர்க்கெல்லாம்
ஏசும் பரிசானாளே; பாவம்! - மாசுனைநீர்
காம்பையலைத் தாலிக்கும் காளத்தி என்றென்று
பூம்பயலை மெய்ம்முழுதும் போர்த்து.

28

328. போர்த்த களிற்றுரியும், பூண்ட பொறியரவும்
தீர்த்த மகளிருந்த செஞ்சடையும் - மூர்த்தி
குயிலாய மென்மொழியாள் கூறாய வாறும்
கயிலாயா, யான்காணக் காட்டு.

29

329. காட்டில் நடம்ஆடிக் கங்காளர் ஆகிப், போய்
நாட்டிற் பலிதிரிந்து நாள்தோறும் - ஓட்டுண்பார்

326.குறிப்புரை: 'திகழ்ந்திலங்கும் ... என் பெண்' என்பதை முதலிற் கூட்டுக. மகிழ்தல், இங்கு விரும்புதலைக் குறித்தது. 'விண் நிறத்தோடு' என்று ஓடுருபு தொகுக்கப்பட்டது. விண்ணின் நிறம் புகைமை. அஃது இங்கு இருளைக் குறித்தது. கா - சோலை.

இது கயிலைப் பெருமான்மேல் காதல் கொண்டாள் ஒருத்திதன் செவிலித் தாய் கூற்று.

327. குறிப்புரை: "மா சுனை நீர்" என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. காம்பு - மூங்கில். ஆலித்தல் - ஒலித்தல். பூம் பசலை - பூப்போலும் பசலை. 'பூ, பீர்க்கம் பூ' என்பது மரபு பற்றிக் கொள்ளப்படும். போர்த்து - போர்க்கப்பட்டு. பேசும் பரிசு - வேறொன்றைப் பற்றியும் பேசும் தன்மை. "பேதை" என்றது சிலேடை பரிசு - தன்மை. 'தன்மை யுடையளாயினார்' என்க, ஏகாரம், தேற்றம் "பாவம்" என்பது, இரக்கம் பற்றி வந்தது. இதுவும் மேலைத் துறை.

328. குறிப்புரை: 'போர்வையாகப் போர்த்த' எனவும், 'பூணாகப் பூண்ட' எனவும் உரைக்க. உரி - தோல், பொறி - புள்ளி. தீர்த்த மகள், கங்கை. மூர்த்தி - வடிவம். இதனை முதற்கண் வைத்து, 'கூறும் ஆயவாறு' என உம்மையை மாறிக் கூட்டி, 'ஆயவாறு காட்டு' என முடிக்க. இது சிவபெருமானது உருவத்தை நினையும் பாட்டாய் அமைதலை யறிக.

329. குறிப்புரை: கங்காளா - எலும்புக் கூட்டைத் தோளில் கொண்டவர். 'நாட்டில் போய்த் திரிந்து' என்க. பலி - பிச்சை