| ஆனாலும் என்கொலோ, காளத்தி ஆள்வாரை வானோர் வணங்குமா வந்து. | | 30 |
| 330. | வந்தமரர் ஏத்தும் மடைக்கூழும், வார்சடைமேல் கொந்தவிழும் மாலை கொடுத்தார்கொல்! - வந்தித்து |
'பிச்சைக்கு' என நான்காவது விரிக்க. 'நாள்தோறும் போய்' எனக் கூட்டுக. ஓட்டு - ஓட்டின்கண், ஓடு, தலைஓடு 'வணங்குமாறு' 'வணங்குமா' எனச் செய்யுள் முடிபு எய்தி நின்றது. "என்கொலோ" என்றது. 'இவரது செயலின் உண்மையை உணர்ந்ததனால்' என்பதனைக் குறிப்பாற் புலப்படுத்தியது. 'அவனும்ஓர் ஐயம்உண்ணி; அதள்ஆடை யாவ(து) | அதன்மேல்ஓர் ஆட லரவம்; | கவணள வுள்ள வுள்கு கரிகாடு கோயில்; | கலனாவது ஓடு; கருதில் | அவனது பெற்றி கண்டும், அவன்நீர்மை கண்டும் | அகன்நேர்வர் தேவ ரவரே.'1 |
என அப்பர் பெருமானும் அருளிச் செய்தமை காண்க. கங்காளம் தாங்கியது முதலியவற்றின் உண்மைகளை, 'நங்காய்,இ தென்னதவம்! நரம்போ டெலும்பணிந்து கங்காளம் தோள்மேலே காதலித்தான் காணேடீ, கங்காளம் ஆமாகேள்; காலாந் தரத்திருவர் தங்காலம் செய்யத் தரித்தனன்காண் சாழலோ.' என்பது முதலியவற்றான் அறிக. 'வானோர் வணங்குவர்' என்றதனால், உண்மை யுணராதவரெல்லாம் இவரது செயலைக் கண்டு இவரை, 'பித்தர்' என்று இகழவே செய்வர் என்பது போந்தது. 'பித்தரே என்றும்மைப் பேசுவர் பிறரெல்லாம்'2 என்றார் ஆளுடைய நம்பிகள். 'இவரைப் பொருள்உணர மாட்டாதா ரெல்லாம் இவரை இகழ்வதே கண்டீர்'.3 என்றார் காரைக்கால் அம்மையார். 330. குறிப்புரை: "மடை" என்பது, 'நிவேதனம்' எனச் சிறப்பும் பெயராயும். "கூழ்" என்பது 'உணவு' என்னும் பொதுப் பெயராயும்
1. திருமுறை - 4.8.1 2. திருமுறை - 7.29.1 3. அற்புதத் திருவந்தாதி - 29.
|