பக்கம் எண் :

247கயிலைபாதி காளத்திபாதி யந்தாதி

வால்உகுத்த வண்கயிலைக் கோமான் மணிமுடிமேல்
பால்உகுத்த மாணிக்குப் பண்டு.

31

331.பண்டிதுவே; அன்றா கில், கேளீர்கொல்! பல்சருகு
கொண்டிலங்கத் தும்பின்னூற் கூடிழைப்பக் - கண்டு
நலந்திக் கெலாம்ஏத்தும் காளத்தி நாதர்
சிலந்திக்குச் செய்த சிறப்பு.

32

332.செய்த சிறப்பெண்ணில், எங்குலக்கும்? சென்றடைந்து
கைதொழுவார்க்(கு) எந்தை கயிலாயர்; - நொய்தளவில்
காலற்காய்ந் தாரன்றே, காணீர்! கழல்தொழுத
பாலற்காய் அன்று பரிந்து.

33


நின்று, இருபெயர் ஒட்டாய் வந்தன. "மாலை" என்பதிலும் எண்ணும்மை விரிக்க. கொல், அசை. வால் உகுத்த - வெள்ளொளியை எங்கும் வீசுகின்ற. மர்ணி - பிரமசாரி. இதில் சண்டேசுர நாயனாரது வரலாறு குறிக்கப்பட்டது. அதனைத் திருத்தொண்டர் புராணத்துட் காண்க.

331. குறிப்புரை: "பல் சருகு" என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. கொண்டு - மேற்கூரையாகக் கொண்டு. இலிங்கம் - திருவானைக்கா வெண்ணாவலின்கீழ் உள்ள இலிங்கம். பின் நூல் - பின்னுகின்ற நூலால் கூடு - பக்தர் நலம் - நலம் செய்வதாகிய கருணை. 'அதனைத் திக்கெலாம் ஏத்தும் காளத்தி நாதன்' என்க. சிலந்திக்குச் செய்த சிறப்பாவது சோழ மன்னனாகப் பிறக்கச் செய்தமை. அம்மன்னனே திருவானைக்கா முதலான எழுபது தலங்களில் சிவபிரானுக்கு மாடக் கோயில் எடுத்த கோச்செங்கணான். "பண்டு இதுவே" என்பதை 'இது பண்டே' என மாற்றி ஏகாரத்தைப் பிரித்துக் கூட்டுக. 'பண்டு' என்பது பெயர்த் தன்மைப்பட்டு, பண்டு நிகழ்ந்த செயலைக் குறித்தது. 'சிறப்பாகிய இது' என இயைக்க அன்றாகில் - 'அவ்வாறு ஒன்று நிகழ்ந்ததில்லை' என்று எவரேனும் கூறுவீராயின். கேளீர்கொல் - செவிப்பொறி இல்லீர் போலும்! கொல், ஐய இடைச்சொல். 'இந்நிகழ்ச்சி நாடறிந்த பெருவழக்காய் இருக்க, அதனை, 'இல்லை' எனச் சொல்லிப்பிணங்குவார் உளராயின் அவர் செவிப் பொறி இல்லாதவரேயாவர்' என்றபடி. 'சிவபிரானுக்கு அன்புடன் சிறு பணி செய்யினும் அவன் பெரும்பயன் தருவன்' என்பது கருத்து.

332. குறிப்புரை: 'கழல் தொழுத பாலற்காய் அன்று பரிந்து நொய்தளவில் காலற் காய்ந்தாரன்றே! சென்று அடைந்து கைதொழுவார்க்கு எந்தை கயிலாயர் செய்த சிறப்பு எண்ணில் எங்கு உலக்கும்?' என இயைத்துக்கொள்க. காணீர், முன்னிலையசை, இதில்