பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை248

333.பரிந்துரைப்பார் சொற்கேளாள்; எம்பெருமான் பாதம்
பிரிந்திருக்க கில்லாமை பேசும் - புரிந்தமரர்
நாதா,வா! காளத்தி நம்பா,வா என்றென்றென
மாதாவா உற்ற மயல்.

34

334.மயலைத் தவிர்க்கநீ வாராய்! ஒருமூன்(று)
எயிலைப் பொடியாக எய்தாய்; - கயிலைப்
பருப்பதவா, நின்னுடைய பாதத்தின் கீழே
யிருப்பதவா வுற்றாள் இவள்.

35


மார்க்கண்டேயருக்கு அருள்செய்த வரலாறு குறிக்கப்பட்டது. எண்ணில் - எண்ணால் கூறி வரையறுக்கப்புகின். எங்கு உலக்கும் - எங்கே போய் முடியும்? 'ஓரிடத்தும் முடியாது, எணிலவாய் மிகும்' என்றதாம். மேல், சண்டேசர், கோச்செங்கணான் இவர்கட்குச் செய்த சிறப்பையும், இங்கு மார்க்கண்டேயர்க்குச் செய்த சிறப்பையும் கூறினார்' 'இப்படி எத்தனைப் பேருக்கு என்னென்ன சிறப்புச் செய்தார்' என வினாவுவார்க்கு விடையும் இதிலே கூறினார். "எந்தை கயிலாயர்" என்பது பன்மை யொருமை மயக்கம். நொய்தளவில் - சிறிது நேரத்திற்குள். பரிந்து - அருள் கூர்ந்து.

333. குறிப்புரை: "என் மாது" என்பதை முதலிலும், "பேசும்" என்பதை "என்றென்று" என்பதன் பின்னும் கூட்டி (இவள்) 'உற்ற மயல், ஆஆ' என முடிக்க. பரிந்து - அன்பு கொண்டு உரைப்பார் சொல்லாவன, 'அவன் உனக்கு எளியனல்லன்; அவனை நீ அடைதல் இயலாது' என்றல் போல்வன. 'பிரிந்திருக்ககில்லாமையால்' என உருபு விரிக்க. பேசும் - பேசுவாள். 'புரிந்த' என்பதன் இறுதிநிலை தொகுத்த லாயிற்று. புரிதல் - விரும்புதல் "ஆஆ" என்பதன்பின் 'என இரங்கத் தக்கது' என ஒரு சொல் வருவித்து முடிக்க. இதுவும் மேற்போந்தன போலச் செவிலி கூற்று. 'சிவனிடத்து அன்பு கொண்டோர் அதனை விலக்கச் சொல்வார் கூற்றைக் கேளார்' என்பது இதன் உள்ளுறை.

334. குறிப்புரை: "கயிலைப் பருப்பதவா" என்பது முதலாகத் தொடங்கி, இறுதியில், "மயலைத் தவிர்க்க வாராய்" என முடிக்க. பருப்பதம் - மலை. அஃது அடியாகப் பிறந்த 'பருப்பதன்' என்னும் பெயர் ஓர் அகரம் விரித்தல் பெற்று, 'பருப்பதவன்' என வந்தது. உன் பக்கத்திலே கூட இருக்க இவள் விரும்பவில்லை; பாதத்தின் கீழேயிருக்க விரும்பினாள்' என்க. "நீ ஒருமூன்று எயிலைப் பொடியாக எய்தாய்" என்றது, 'தேவர் பொருட்டு அதனைச் செய்த அருளுடையையன்றோ? இவட்கு இது நீ செய்யலாகாதோ' என்றபடி. 'இருப்பது' என்பது தொழிற்பெயர். 'இருப்பதற்கு' என நான்காவது விரித்து, அதனை, 'அவாவைப் பொருந் தினாள்' என்க. இவ்வாறின்றி,