| 335. | இவளுக்கு நல்லவா றெண்ணுதிரேல், இன்றே தவளப் பொடியிவள்மேல் சாத்தி, - இவளுக்குக் காட்டுமின்கள் காளத்தி; காட்டிக் கமழ்கொன்றை சூட்டுமின்கள்; தீரும் துயர். | | 36 |
| 336. | துயர்க்கெலாம் கூடாய தோற்குரம்பை புக்கு மயக்கில் வழிகாண மாட்டேன்; - வியற்கொடும்போர் ஏற்றானே! வண்கயிலை எம்மானே! என்கொலோ, மேற்றான் இதற்கு விளைவு! | | 37 |
| 337. | விளையும் வினைஅரவின் வெய்ய விடத்தைக் களைமினோ! காளத்தி ஆள்வார் - வளைவில் |
"அவா உற்றார்" என்பதனை 'அவாவினாள்' என ஒரு சொல் நீர்மைத்தாகக் கொண்டு, 'அவாவை' என இரண்டாவது விரிப்பினும் ஆம் இதுவும் செவிலி கூற்றே. 335. குறிப்புரை: இன்றே - இப்பொழுதே. தவளப் பொடி - வெண்பொடி; திருநீறு. 'சந்தனத்தைப் பூசி இவள் உடல் வெப்பத்தைத் தணிக்க நினையாதீர்கள்' என்பதாம். 'அது இவளுக்கு மேலும் வெம்மையைத் தரும்' என்பது குறிப்பு. 'காளத்தி காட்டுமின்கள்' என்க. இப்பாட்டு தலைவிதன் வேற்றுமைக்குக் காரணம் அறியாது செவிலியும், நற்றாயும் அதனைப் பரிகரிக்க முயல்கையில் பாங்கி அறத்தொடு நின்றது. சிவனடியார்கட்குச் சிவன்பணி கூடாமையால் உளதாகும் வருத்தம் பிறிதொன்றால் தீராமை இதன் உள்ளுறை. 336. குறிப்புரை: "வியற் கொடும் போர்.... எம்மானே" என்பது தொடங்கி, 'இதற்கு மேல் விளைவு என்கொலோ' என முடிக்க. வியல் - பெரிய. "வியல் கொடும் போர்" என்பது ஏற்றிற்கு இன அடை. ஏறு - இடபம். குரம்பை - குடில். தோற் குரம்பை - தோலால் மூடப்பட்ட குடில்; உடம்பு. மயக்கில் - மயக்கத்தால், வழி - செல்லத்தக்க வழி "இது" என்றது மாட்டாமையை. "இதற்கு விளைவு" என்பதில் நான்காவது, 'அவர்க்கு ஆகும் அக்காரியம்' என்பதுபோல மூன்றாவதன் பொருட்டு. மேல் விளைவு - பின் விளைவு. தான், அசை, கொல், ஐயம். ஓ, அசை. 'இவ் அறியாமை அறியாமையேயாகப் பிறவியே விளையுமோ! உனது அருளால் இது நீங்கி அறிவு தோன்ற, உனது திருவடிப்பேறு விளையுமோ! அறிகின்றலேன்' என்பதாம். 337. குறிப்புரை: "வினை அரவு", "திருநாமம் என்னும் மருந்து" - இவை உருவகங்கள். விளையும் வினை, பிராரத்த வினை. அதனை
|