| திருந்தியசீர் 'ஈசன்' திருநாமம் என்னும் மருந்தினைநீர் வாயிலே வைத்து. | | 38 |
| 338. | வாயிலே வைக்கு மளவில் மருந்தாகித் தீய பிறவிநோய் தீர்க்குமே; - தூயவே கம்பெருமா தேவியொடு மன்னு, கயிலாயத்(து) எம்பெருமான் ஓர்அஞ் செழுத்து. | | 39 |
"அரவு" என்றதனால், "அதன் விடம்" என்றது, அது விளையும் பொழுது உளவாகின்ற இன்பத் துன்ப அனுபவங்களால் தோன்றும் ஆகாமியத்தையாம். "திருவாஞ் சியத்துறையும் - ஒருவனார் அடியாரை ஊழ்வினை நலிய ஒட்டாரே"1 என்று அருளிச்செய்தது இது நோக்கி. "களைமின்" என்பதை இறுதிக்கண் கூட்டுக. ஓகாரம், அசை. 'ஆள்வாரது' என ஆறாவது விரிக்க. வளைவு - கோட்டம்; அஃதாவது மெய்யான. சீர் - புகழ்ய 'சீரை விளக்கும் திருநாமம்' என்க. 'ஈசன் ஆம் திருநாமம்' என ஒற்றுமைப் பொருட்டாகிய ஆக்கம் விரிக்க. ஈசன் - ஐசுவரியத்தையுடையவன், இஃது உபலக்கண மாய் ஏனை பல பெயர்களையும் குறிக்கும். 'சிவபெருமானது பொருள் சேர்ந்த புகழை எப்பொழுதும் சொல்லுதலே வினை நீக்கத்திற்கு வழி' என்றபடி. 'இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.'2 என்னும் பொது மறையையும் காண்க. 'மருந்துகள் யாவும் உள் விழுங்கவே நோயைத் தீர்க்கும்; இஃது அவ்வாறின்றி, வாயில் வைத்த அளவே நோயைத் தீர்ப்பதோர் அதிசய மருந்து என்னும் நயத்தைத் தோற்றுவித்தமையறிக. புகழ்கள் சொல்லப்படுதல் வாயினாலே யன்றோ! இவ்வாறே, வருகின்ற வெண்பாவில், "வாயிலே வைக்கு மளவில் மருந்தாகி" - என ஓதுதல் காண்க. 338. குறிப்புரை: "தூய" என்பது, வேறுபடுதல் இன்மை யைக் குறித்தது. 'பெருமாதேவியொடு தூய ஏகமாய்மன்னு எம் பெருமான்' என ஆக்கம் வருவித்துரைக்க. தலைவரா யினார்க்குத் தேவியாயினாரை 'மாதேவி' என்றல் வழக்காதலின் தலைவர்க்கெல்லாம் தலைவனுக்குத் தேவியாயி னாளை, "பெருமாதேவி" என்றார். 'அஞ்செழுத்து ஆகித் தீர்க்கும்' என முடிக்க. "அஞ்செழுத்து" என்பது தொகைக் குறிப்பாய், "நமச்சிவாய" என்பவற்றைக் குறித்தல் மரபு வழியால் பெறப்பட்டது. மரபு சைவாகம மரபு. பிறவியை நோயாக உருவகித்தற்கு ஏற்ப
1. திருமுறை - 7.76.1. 2. திருக்குறள் - 5.
|