| 339. | அஞ்செழுத்துங் கண்டீர் அருமறைகளா வனவும், அஞ்செழுத்தும் கற்க அணித்தாகும் - நஞ்சவித்த காளத்தி யாருக்கும் காண்டற் கரிதாய்ப்போய் நீளத்தே நின்ற நெறி. | | 40 |
அஞ்செழுத்தை மருந்தாக உருவகிக் கின்றார் ஆகலின் அதற்கேற்ப, 'வாயாலே சொல்லுமளவில்' என்னாது, "வாயிலே வைக்கு மளவில்" என்றார். வாயிலே வைத்த அளவில் நோய் நீங்குதல் கூறப்பட்டமையால், பின்னும் பின்னும் பேணி ஒழுக ஒழுகப் பேரின்பம் பெருகுதல் பெறப்பட்டது. இவ்வஞ்செழுத்தின் பெருமையே திருமுறை களில் எங்கும் விரித்துப் பேசப்படுதல் வெளிப்படை. அவ்வாற்றானே இங்கும் பேசப்பட்டது. 'பிறவி நோயாதல் தெளிவாதல் போல, அஞ்செழுத்தே அந்நோய்க்கு மருந்தாதல் தெளிவு' என்பதாம். 339. குறிப்புரை: அஞ்செழுத்தும் ஏற்ற பெற்றியால் சொற்களுக்கு உறுப்பாதலேயன்றி, இறைவனது அருளாணை யால் அஞ்சு பதங்களுமாதல் பற்றி, "அஞ்செழுத்தும் என முற்றும்மை கொடுத்தார். துஞ்சலும் துஞ்சலிலாத போழ்தினும்'1 என்னும் திருப்பதிகத்திலும், 'ஏதும் ஒன்றும் அறிவில ராயினும் ஓதி அஞ்செழுத் தும் உணர்வார்கட்குப் பேத மின்றி அவரவ ருள்ளத்தே மாதும் தாமும் மகிழ்வர்மாற் பேறரே.'2 என்றாற்போலும் இடங்களிலும் 'அஞ்செழுத்தும்' என உம்மை கொடுத்தே ஓதப்பட்டன. "அந்தியும் நண்பகலும்" அஞ்சு பதம் சொல்லி"3 என்பதில் அஞ்செழுத்தும் அஞ்சு பதங்களாதல் குறித்தருளப்பட்டது. இனி, இங்கு மேலை வெண்பாவிலும், அஞ்சினால் உய்க்கும் வண்ணம் காட்டினாய்க் கச்சம் தீர்ந்தேன்"4 அஞ்செழுத்து - ஓதி ஏறினார் உய்ய உலகெலாம்"5 என்றாற் போலும் இடங்களிலும் உம்மையின்றியே ஓதப்பட்டது. அஞ்செழுத்தும் சொற்கு உறுப்பாய் நிற்க. அதனாலாம் தொடர்மொழி, 'சிவனுக்கு வணக்கம்' என்னும் ஒரு பொருளையே
1. திருமுறை - 3.32. 2. " - 5.59.1. 3. " - 7.83.1. 4. " - 4.26.5. 5. பெரிய புராணம் - சம்பந்தர் - 216.
|